*நம்மால் முடியும்*. என்தனை நிரூபித்து காட்டியுள்ளார் ஒரு இளைஞர்.
சென்னை சிட்கோ நகரில் குப்பைதொட்டியாக பயன்படுத்திவந்த கிணற்றை ,₹5,00,000 தமது சொந்த பணத்தில் மழைநீரை சேமிக்கும் கிணராக திரு பாபு அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள் அவர்களுக்கு நமது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். https://t.co/hOv33MAqDi.
வில்லிவாக்கம் சிட்கோ நகரில் வசிக்கும் *திரு.வெங்கடேஷ்வர பாபு* தனது சொந்த இயந்திரங்கள் துணையுடன் மெட்ரோ வாட்டர் துறையின் கீழ் *சிட்கோ நகர்* 9வது சாலையில் உள்ள மிகப் பெரிய பொது கிணறு ஒன்றை *சுமார் ஐந்து லட்சம்* ரூபாய் சொந்த பணத்தை கொண்டு சுத்தம் செய்கிறார்.
சுமார் 10 ஆண்டுகளாக குப்பை தொட்டியாக மாறிவிட்ட நீர் நிலையை கண்டு மனம் தாளாது *கிணற்றுக்கு உயிர்* கொடுக்க இத்தொண்டை சமூக கடமையாக செய்துள்ளார்.
தன்னை வெளிகாட்டிக் கொள்வதில் ஆர்வமில்லாதவரான அவர் தினமும் *சென்னையில்* சமூகத்தால் சாலையோரத்தில் கைவிடப்பட்ட 100 நபர்களுக்கு நேரடியாக *மதிய உணவு* கடந்த ஓராண்டாக *அன்பாலயம்* என்ற பெயரில் அளித்து வருகிறார்.
சமூகத்திற்கு தன்னாலானவற்றை திருப்பி செலுத்துதல் எனது *சமூக கடமை* என அலட்டிக் கொள்ளாமல் கூறுகிறார்.
*வளர்ந்த இந்தியா 2020*க்கு இது போன்ற நூறு ஆயிரம்* சமூக அக்கறையாளர்கள் இந்தியா முழுவதும் அவசியம் தலைமை ஏற்றால் *இது சாத்தியமே*
*மகிழ்ச்சி*