தன்னை சத்குரு என்று அழைத்துக்கொள்ளும் சத்துரு ஜக்கி வாசுதேவ் ‘காவேரி காலிங்’நிகழ்ச்சியின் மூலம் 10 ஆயிரத்து 626 கோடி ரூபாயை வசூலிக்கத்திட்டமிட்டிருக்கிறார். ஒரு தனியார் நிறுவனத்துக்கு இதற்கான அனுமதியை எப்படி வழங்கலாம்? என்று கர்நாடக உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் சுமார் 256 கோடி மரக்கன்றுகளை நடும் ஒரு புதுவிதமான யுக்தியுடன் ஜக்கி வாசுதேவ் ‘காவேரி கால்லிங்’என்ற பெயரில் கூக்குரல் இட்டிருந்தார். இந்த பிரச்சாரத்துக்காக பெருமளவில் நடிகர்,நடிகைகளைத் திரட்டி போஸ் கொடுத்த அவர், அடுத்து தமிழக முதல்வர் உட்பட சகல கட்சி அரசியல்வாதிகளையும் அரவணைத்துக்கொண்டார். அவரை முதல்வர் எடப்பாடி உள்ளிட்டவர்களே நம்காலத்தில் வாழும் மாமுனி என்று உச்சி முகர்ந்தனர்.
இந்நிலையில் இந்த காவேரி காலிங் என்பது மாபெரும் மோசடி என்றும் ஒரு மரக்கன்றை நடுவதற்கு பொது மக்களிடமிருந்து ரூ 42 ஐ நிதியாக எதிர்பார்ப்பதன் மூலம் ஜக்கி ரூ 10 ஆயிரத்து 626 கோடியை வசூலிக்கத் திட்டமிட்டிருக்கிறார் என்றும் திம்மக்கா போன்ற ஏழை ஜனங்களே தங்கள் சொந்தப் பணத்தில் மரக்கன்றுகளை நடும்போது ஜக்கி அவ்வளவு பெரிய நிதியைத் திரட்ட அனுமதிக்கப்பட்டது எப்படி என்றும் பெங்களூருவைச் சேர்ந்த ஏ.வி.அமரநாதன் என்ற வழக்கறிஞர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
தலைமை நீதிபதி அபய் ஸ்ரீனிவாஸ், மற்றும் நீதிபதி முகம்மது நிவாஸ் ஆகியோர் முன்னிலையில் நேற்று அம்மனு விசாரணைக்கு வந்த நிலையில் ஜக்கியின் மரக்கன்று வசூல் மீது உடனடியாக விசாரணை நடத்தும்படி மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.