தமிழகத்திற்கு திட்டமிட்டே வெங்காயம் மறுக்கப்பட்டதா? அல்லது தமிழக அரசு வாங்குவதற்கு விருப்பமில்லையா கேள்வி கேட்கும் த. இ.க மாநிலத் துணைச் செயலாளர்.க. முகமது அலி.
தமிழகம் தவிர்த்து மற்ற பிற மாநிலங்களான திரிபுரா ஹரியானா ஆந்திர மாநில அரசுகளுக்கு மத்திய அரசு குறைந்த விலையில் ரூபாய் 15.59 வெங்காயம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் தமிழகத்தில் வெங்காயம் தாறுமாறாக சுமார் ரூபாய் 50 க்கு விற்பனையாகிறது மத்திய அரசு பெரியாரின் மீது உள்ள கோபத்தால் தமிழக அரசுக்கு வெங்காயம் விநியோகம் செய்யவில்லையா? அல்லது வெங்காயம் வாங்குவதற்கு கூட தமிழக அரசின் நிதி பற்றாக்குறையா?
அல்லது இதற்கென தனியாக கார்ப்பரேட் நிறுவனத்தை ஏஜண்டாக நியமிக்க தாமதம் காட்டுகிறதா தமிழக அரசு ? என்ற கேள்வி சாதாரண மக்களின் மனதில் எழுந்துள்ளது.
இவற்றை நீக்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு கடமையாகும் என தமிழ்நாடு இளைஞர் கட்சியின் மாநில துணைச் செயலாளர் திரு க. முகமது அலி.அவர்கள் தெரிவித்தார்.