தமிழ்நாட்டு காவலர்களுக்கு பயிற்சி முகாம் தமிழ்நாடு காவலர் மற்றும் நேஷனல் இன்ஸ்டியபோ ஆஃ மெண்டல் ஹீழ்த் அண்ட் நியூரோ சயின்ஸ் இணைந்து (Training Workshop on Police Well Being (organised by) Tamilnadu Police & National Institute of Mental Health and Neuroscience @ Karur) வேலைப்பளுவை எப்படி சமாளிப்பது மற்றும் குழந்தைகளை பராமரிப்பது எப்படி என்று திரு. சந்தோஷ் குமார் ஆய்வாளர் தலைமையில், திருமதி. கிருத்திகா – சார்பு ஆய்வாளர், திரு. சேதுபதி – மேனாள் துணை முதல்வர் – கரூர் ஆசிரியர் பயிற்சி பள்ளி, மாயனூர் மற்றும் திரு. வடிவேல் – கொங்கு கலை கல்லூரி, அவர்கள் மூன்று நாள் பயிற்சியாக கரூர் எஸ்பி அலுவலகத்தின் பயிற்சி எடுத்தார்கள்.
இதில் காவலர்களும் மற்றும் அவரது குடும்பத்தினரும் கலந்துகொண்டு, எப்படி இக்கட்டான சூழ்நிலையை சமாளிப்பது என்று கற்றுக்கொண்டனர். மூன்றாம் நாள் இறுதியில் பங்கு பெற்ற அனைத்து காவலர்களுக்கும் தகுதிச் சான்றிதழ்கள் திரு. பாண்டியராஜன் எஸ்பி அவர்கள் தலைமை தாங்கி காவலர்களுக்கு கொடுத்தார்.
அதிர்ஷ்டவசமாக திரு. பாண்டியராஜன் எஸ் பி அவர்களின் தாயாரிடம் ஒரு மகனாக லவுட் ஸ்பீக்கரில் தொலைபேசி மூலம் பேசியது மிகவும் முக்கிய பங்காற்றியது. ஒரு உயர் நிலை பதவியில் வகிக்கும் போதுகூட தன் தாயிடம் எப்படி நடந்துகொண்டார் என்பது வியப்பாக இருந்தது.
சக காவலர்கள் அனைவரும் திரு. பாண்டியராஜன் எஸ்பி அவர்களின் பேச்சை கேட்டு மகிழ்ந்ததோடு அல்லாமல் அவர்களது குடும்பத்தில் நாம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று கூறியதும் ஆச்சரியமாகத்தான் இருந்தது.
ஏனெனில் மிக வேலைப்பளு உடன் காவலர்கள் பணியாற்றிவிட்டு வெறும் மூன்று நாட்களில் தங்களை பக்குவப்படுத்தி கொண்டு குழந்தைகளை இப்படித்தான் இனிமேல் வளர்க்க வேண்டும் என்று மெழுகுவர்த்தி ஏற்றி உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள்.
நன்றி – இளைஞர் குரல்