Sunday , October 13 2024
Breaking News
Home / இந்தியா / திருமணம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட லாஸ்லியா!

திருமணம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட லாஸ்லியா!

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் இறுதி நாள் கொண்டாட்டத்துக்கு முன்னதாக சாண்டி, முகின், லாஸ்லியா, ஷெரின் ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்குள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அந்தச் சந்திப்பில் செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்து பேசிய லாஸ்லியா, “இலங்கையைச் சேர்ந்த நான் கனடாவில் வளர்ந்தேன். புதுமுகமாக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தபோதும் கூட தமிழக மக்கள் கொடுத்த ஆதரவால் இந்த இடம் கிடைத்திருக்கிறது.

நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருக்கிறேன். என் அப்பா வந்தபோது அவரை இந்த சமூகம் எப்படி நடத்தியதோ அது எனக்குத் தெரியாது. அவர் என்ன பேசினாலும் என் அப்பாதான். அந்த உறவில் எந்த சிக்கலும் கிடையாது. என்னுடைய நன்மைக்காகத் தான் அவர் அப்படி பேசியுள்ளார்.

எனது அப்பா மிகவும் பாசமானவர். என் பெற்றோர்கள் காதல் திருமணம் செய்தவர்கள். நாங்கள் இப்படித் தான் காதலித்தோம் எனச் சொல்லி சொல்லி தான் எங்களை வளர்த்தார்கள். ஆனாலும் பெற்றோர் சம்மதத்துடன் தான் திருமணம். என்னுடைய பெற்றோர்கள் நாங்கள் சொல்வதைத் தான் கேட்பார்கள். நான் உண்மையாக இருந்திருக்கிறேன் என்று எனது பெற்றோர்களுக்குத் தெரியும்.” என்று கூறியிருந்தார்.

இந்த சீசனில் கவின் -லாஸ்லியா இடையே இருந்த காதலும், லாஸ்லியாவின் தந்தை பிக்பாஸ் வீட்டுக்குள் வந்ததும் பார்வையாளர்களிடையே அதிக கவனம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Bala Trust

About Admin

Check Also

ரத்தன் டாடா எனும் சகாப்தம்…

பிறப்பு: டிசம்பர் 28, 1937 | இறப்பு: அக்டோபர் 9, 2024 ஒரு இந்திய தொழிலதிபர் ஆவார் , அவர் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES