Sunday , September 8 2024
Breaking News
Home / இந்தியா / குடியுரிமை திருத்தச் சட்டம் (சி,ஏ.ஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்) ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ஒரு மாதத்திற்கு மேலாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய யூனியன் எம்பிக்களின் தீர்மானம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. அடுத்த வாரம் பிரசல்ஸ் நகரில் ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது. அக்கூட்டத்தொடரில் 150க்கும் மேற்பட்ட எம்பிக்கள் தீர்மானம் தாக்கல் செய்யவுள்ளனர். அந்த தீர்மானம் குறித்து எம்பிக்கள் கூறுவதாவது, “இந்திய அரசு சிறுபான்மையினரின் குடியுரிமையை சட்ட ரீதியில் பறிப்பதற்காக இந்த சட்டத்தை உருவாக்கியுள்ளது. இச்சட்டம் செயல்படத்தொடங்கினால் பலர் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவர். குடியுரிமை என பெயரில் சர்வதேச கடமைகளை மீறி இச்சட்டத்தை இந்தியா கொண்டு வந்துள்ளது. இது பாரபட்சமானது என ஐ.நா மனித உரிமை ஆணையம் முன்னதாகவே தெரிவித்தது. இந்தியா இந்த சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுவோர் மீது பாதுகாப்பு படையினரின் தாக்குதல், அடக்குமுறை குறித்து பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்த வேண்டும். இந்த சட்டம் அமலாக்கப்பட்டிருப்பது வருத்தத்தை அளிக்கிறது. இது பிரிவினைக்கு வழி வகுக்கும். இதனை கண்டிக்கிறோம்” என கூறியுள்ளனர். ஆனால், ஐ.நாவின் இந்த தீர்மானங்கள் குறித்து டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில், குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது முழுக்க முழுக்க இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என தெரிவித்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம் (சி,ஏ.ஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்) ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ஒரு மாதத்திற்கு மேலாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய யூனியன் எம்பிக்களின் தீர்மானம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. அடுத்த வாரம் பிரசல்ஸ் நகரில் ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது. அக்கூட்டத்தொடரில் 150க்கும் மேற்பட்ட எம்பிக்கள் தீர்மானம் தாக்கல் செய்யவுள்ளனர். அந்த தீர்மானம் குறித்து எம்பிக்கள் கூறுவதாவது, “இந்திய அரசு சிறுபான்மையினரின் குடியுரிமையை சட்ட ரீதியில் பறிப்பதற்காக இந்த சட்டத்தை உருவாக்கியுள்ளது. இச்சட்டம் செயல்படத்தொடங்கினால் பலர் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவர். குடியுரிமை என பெயரில் சர்வதேச கடமைகளை மீறி இச்சட்டத்தை இந்தியா கொண்டு வந்துள்ளது. இது பாரபட்சமானது என ஐ.நா மனித உரிமை ஆணையம் முன்னதாகவே தெரிவித்தது. இந்தியா இந்த சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுவோர் மீது பாதுகாப்பு படையினரின் தாக்குதல், அடக்குமுறை குறித்து பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்த வேண்டும். இந்த சட்டம் அமலாக்கப்பட்டிருப்பது வருத்தத்தை அளிக்கிறது. இது பிரிவினைக்கு வழி வகுக்கும். இதனை கண்டிக்கிறோம்” என கூறியுள்ளனர். ஆனால், ஐ.நாவின் இந்த தீர்மானங்கள் குறித்து டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில், குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது முழுக்க முழுக்க இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என தெரிவித்துள்ளது.

சர்வதேச விதிகளை மீறுகிறது இந்தியா: CAA சட்டத்தை எதிர்த்து ஐ.நா அதிரடி தீர்மானம்

Bala Trust

About Admin

Check Also

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

தமிழகத்துக்கு அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்கவும், படித்த இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், மேலும் பல புதிய தொழில்களை தமிழகத்தில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES