Wednesday , October 16 2024
Breaking News
Home / இந்தியா / கொரோனா: அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களையே பிரசுரிக்கவும்.. ஊடகங்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு.

கொரோனா: அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களையே பிரசுரிக்கவும்.. ஊடகங்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு.

கொரோனா: அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களையே பிரசுரிக்கவும்.. ஊடகங்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு.

டெல்லி: கொரோனா குறித்த புத்தம் புதிய தகவல்களை அரசின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்திலிருந்து வெளியிட வேண்டும் என ஊடகங்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸை எதிர்த்து போராடும் போது போலி செய்திகள் மிகப் பெரிய இடையூறாக உள்ளதாக உள்துறை அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தது.
அதில் உண்மைகளை அறியாமல் எந்த ஊடகமும் கொரோனா வைரஸ் தொடர்பான செய்திகளை அச்சிடவோ வெளியிடவோ ஒளிபரப்பவோ கூடாது என உத்தரவிட வேண்டும் என மத்திய அரசு தனது மனுவில் கோரிக்கை விடுத்தது.

இந்த வழக்கை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ் ஏ பாப்டே தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு கூறுகையில் இந்தியாவில் அடுத்த 3 மாதங்களுக்கு ஊரடங்கு உத்தரவு தொடரும் என்ற போலி செய்தியை இன்று ஏராளமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பீதியடைந்து பெருநகரங்களை விட்டு சொந்த ஊர்களுக்கு நடந்து செல்வதற்கு காரணமாகும்.

இந்த பீதியினால் அவர்கள் சொல்லொண்ணாத் துயரங்களை அடைகின்றனர். நடந்தே செல்லும் போது சிலர் தங்கள் உயிரையும் இழக்கின்றனர். அச்சுறுத்தலை ஏற்படும் போலி செய்திகள் எலக்ட்ரானிக் மீடியா, அச்சு மீடியா, சோஷியல் மீடியா ஆகியவற்றில் எங்கிருந்து வந்தது என்பதை எங்களால் கண்காணிக்க முடியாது.
எனவே கொரோனா தொடர்பான தகவல்களை அரசு அவ்வப்போது வெளியிட வேண்டும். இதற்காக இன்னும் 24 மணி நேரத்தில் ஒரு இணையதள பக்கத்தை உருவாக்கி அதில் அவ்வப்போது அப்டேட்ஸ்களை கொடுக்க வேண்டும்.
இந்த பக்கத்தில் இருந்து எடுக்கப்படும் தகவல்களே அதிகாரப்பூர்வமானது. எனவே ஊடகங்களும் கொரோனா குறித்த புத்தம் புதிய தகவல்களை அரசின் அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்திலிருந்து வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Bala Trust

About Admin

Check Also

ரத்தன் டாடா எனும் சகாப்தம்…

பிறப்பு: டிசம்பர் 28, 1937 | இறப்பு: அக்டோபர் 9, 2024 ஒரு இந்திய தொழிலதிபர் ஆவார் , அவர் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES