Wednesday , September 18 2024
Breaking News
Home / இந்தியா / மிரட்டலுக்கு பயந்த தாய்… களமிறங்கிய ரசிகர்கள் – சித்தார்த் நெகிழ்ச்சி

மிரட்டலுக்கு பயந்த தாய்… களமிறங்கிய ரசிகர்கள் – சித்தார்த் நெகிழ்ச்சி

தனக்கு வந்த 500 மிரட்டல் கால்களை கண்டு தனது தாய் பயந்துவிட்டதாகவும், ரசிகர்கள் ஆதரவாக களமிறங்கியதாகவும் நடிகர் சித்தார்த் கூறியிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் சித்தார்த். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தனது டுவிட்டரில் பதிவு செய்திருந்தார். இந்த பதிவுக்கு பாஜகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில் நடிகர் சித்தார்த் தனது டுவிட்டர் பக்கத்தில் தன்னுடைய தொலைபேசி எண்ணை பாஜகவின் ஐடி பிரிவினர் வெளியிட்டதாகவும் இதனால் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 500 மிரட்டல் கால்கள் வந்ததாகவும் கூறினார்.

இதற்கு சமூக வலைத்தளத்தில் சித்தார்த்துக்கு ஆதரவாக ரசிகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கருத்து தெரிவித்து வந்தார்கள். இதற்கு நடிகர் சித்தார்த், எனக்கு வரும் மிரட்டல்களைப் பார்த்து என் அம்மா மிகவும் பயந்துவிட்டார். அவருக்குத் தைரியம் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை, அதனால், உங்கள் ட்வீட்களைதான் அவர்களிடம் படித்தேன். என்னுடன் துணைநின்ற அனைவருக்கும் நன்றி. மிகவும் எளிய பின்னணியிலிருந்து வந்த மிகவும் சாதாரண மனிதர்கள் நாங்கள். எங்களுக்கு உங்கள் ஒவ்வொருவரின் வார்த்தைகளும் அத்தனை மதிப்புமிக்கவை என்று நெகிழ்ச்சியுடன் பதிவு செய்திருக்கிறார். Courtesy : maalaimalar cinema

Bala Trust

About Admin

Check Also

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

தமிழகத்துக்கு அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்கவும், படித்த இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், மேலும் பல புதிய தொழில்களை தமிழகத்தில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES