கரூர் மாவட்டம், கரூர் வட்டம், தாந்தோணி ஒன்றியம், வெள்ளியணை ஊராட்சி, வெள்ளியணை தென்பாகம், ஜல்லிபட்டியில் இன்று 15.10.2021, வெள்ளி கிழமை காலை 11.00 மணிக்கு, கரூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் மூலம் ஜல்லிபட்டி ஊர் பொது மக்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகமானது தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இம்முகாமிற்கு ஜல்லிபட்டி திரு, இரா. பாலமுருகன் plv அவர்கள் வரவேற்புடன் ஆரம்பிக்கப்பட்டது. ஜல்லிபட்டி திரு. வை. க. முருகேசன் அமிர்தா அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் தலைமை தாங்கினார். வெங்கக்கல்பட்டி திரு, எம். மாரியப்பன் முன்னிலைவகித்தார். கரூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் சார்பாக திரு, பி. முருகேசன் வழககுரைஞர் அவர்கள் நமது இந்திய நாட்டின் அரசியல் அமைப்பு சட்ட திட்டங்கள், நமது உரிமை, கடமைகள், நாம் சட்டதை எவ்வாறு கையாள வேண்டும், யாரை அணுகி சட்டம் சம்பந்தமான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, ஆலோசனை பெறுவது, உதவி பெறுவது, வன்கொடுமை, சிறார் திருமணம், தகவல் அறியும் உரிமை சட்டம் என்று பலவிதமான சட்டங்கள் குறித்து தெளிவான விளக்கத்தை மகளுக்கு எடுத்து கூறினார். மேலும் தாங்கள் பிரச்சனைகள் சம்மந்தமாக கரூர் சட்ட பணிகள் ஆணைக்குழுவை நாடி உதவி பெறலாம் எனவும் எடுத்துரைத்தார். சில கோரிக்கை மனுக்களும் பெறபட்டது. இறுதியாக ஜல்லிபட்டி திரு, இரா. பாலமுருகன் plv அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறி நாட்டுபண்ணுடன் முகமானது நிறைவு செய்யப்பட்டது. இம்முகாமில் சுமார் 50க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர். நன்றி. அய்யா. இப்படிக்கு. இரா. பாலமுருகன் plv ஜல்லிபட்டி, கரூர் மாவட்டம்.
Home / கரூர் / கரூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் மூலம் ஜல்லிபட்டி ஊர் பொது மக்களுக்கு சட்ட விழிப்புணர்வு…
Check Also
78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரவக்குறிச்சி ரோட்டரி உறுப்பினர்கள் கொடியேற்றும் விழாவில்…
78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அரவக்குறிச்சி ரோட்டரி உறுப்பினர்கள் அரவக்குறிச்சி பகுதியைச் சார்ந்த நான்கு அரசாங்க பள்ளிகளில் கொடியேற்றும் விழாவில் …