Monday , October 14 2024
Breaking News
Home / இந்தியா / மணப்பாறை மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகளில் இரண்டு அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் திறப்பு…

மணப்பாறை மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகளில் இரண்டு அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் திறப்பு…

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 20 கலை அறிவியல் கல்லூரிகளைத் திறந்துவைத்து சாதனை படைத்துள்ளார்.

இதில் எமது கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மணப்பாறை மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிகளில் இரண்டு அரசு கலை, அறிவியல் கல்லூரிகளையும் இன்று காணொளி வாயிலாகத் திறந்து வைத்துள்ளார்கள்.

இந்த கல்லூரிகள் அமைய வேண்டும் என்பது எமது மக்களின், மாணவர்களின் நீண்ட காலக் கனவு.

அந்த கனவு இன்று நினைவாகி இருக்கிறது. இதற்கான முயற்சியில் எனது எளிய பங்களிப்பும் உள்ளது என்பதில் மகிழ்ச்சியும்,மனநிறைவும்.

மாண்புமிகு தமிழக முதல்வர் M. K. Stalin அவர்களுக்கும், உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. பொன்முடி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் (காங்கிரஸ் MP) ஜோதிமணி அவர்கள் தெரிவித்தார்.

Bala Trust

About Admin

Check Also

ரத்தன் டாடா எனும் சகாப்தம்…

பிறப்பு: டிசம்பர் 28, 1937 | இறப்பு: அக்டோபர் 9, 2024 ஒரு இந்திய தொழிலதிபர் ஆவார் , அவர் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES