மதுரையில் மனித உரிமை செல் மாநில கலந்தாய்வு கூட்டம் மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தலைவர் குமாரகிருஷ்ணன், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.முன்னதாக எஸ்.எஸ்.காலனியில் உள்ள மேற்கு மண்டல அலுவலகத்தை அவர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முனைவர் பிச்சைவேல் தலைமை வகித்தார். மேற்கு மண்டல தலைவர் டாக்டர் ராகவன் மற்றும் மேற்கு மண்டல துணைத் தலைவர் டாக்டர் கஜேந்திரன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்நிகழ்வின் போது பல்வேறு சமூக சேவைகள் செய்ததற்காக மாவட்ட தலைவர் முனைவர் பிச்சைவேல், பத்திரிகையாளர் மயிலேறி, மருத்துவர் குருலட்சுமி கஜேந்திரன், டாக்டர் ஆர்த்தி, பாலாஜி போன்றவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் இளைஞரணி செயலாளர் சிலம்பம் சண்முகவேல், பரவை அசோக், பொன்முருகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மண்டல பொருளாளர் பாலமுருகன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை கனகராஜ்