Sunday , November 10 2024
Breaking News
Home / செய்திகள் / மதுரை மாவட்டம் கப்பலூர் நெல் கொள்முதல் கிடங்கில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதை தடுக்க பாஜக விவசாய அணி மாநில துணை தலைவர் முத்துராமன் ஜி கோரிக்கை..!

மதுரை மாவட்டம் கப்பலூர் நெல் கொள்முதல் கிடங்கில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதை தடுக்க பாஜக விவசாய அணி மாநில துணை தலைவர் முத்துராமன் ஜி கோரிக்கை..!

மதுரை மாவட்டம் கப்பலூர் நெல் கொள்முதல் கிடங்கில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதை தடுக்க பாஜக விவசாய அணி மாநில துணை தலைவர் முத்துராமன் ஜி கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் புகார் மனு வழங்க உள்ளதாகவும் கூறினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் அறிவுறுத்தலின் பேரிலும், விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே நாகராஜன் அவர்களின் ஆணைக்கிணங்க, மதுரை மாவட்டம் கப்பலூரில் உள்ள நெல் கொள்முதல் கிடங்கில் ஆய்வு மேற்கொண்டேன்.

அப்போது சுமார் ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து அனைத்தும் முளைத்து பயனற்று உள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். விவசாயிகள் கஷ்டப்பட்டு அறுவடை செய்து இந்த நெல் மணிகளை தமிழக அரசிடம் கொண்டு சேர்க்கின்றனர். ஆனால் இந்த நெல் மணிகளை அலட்சியமாக திறந்த வெளியில் அடுக்கி வைத்து மழையில் நனைய விடுவதால் வீணாக முளைத்து பயனற்றதாகி விடுகிறது.

எனவே இந்த நெல் மூட்டைகளை மழையில் நனைய விடாமல் பாதுகாப்பதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டு விரைவில் சரி செய்ய கோரிக்கை விடுத்துள்ளேன்.

மேலும் இது சம்பந்தமாக நாளை புதன்கிழமை காலை மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் புகார் மனு அளிக்க உள்ளேன் என கூறினார்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர் சங்கம் (டாக்பியா) சார்பாக பெருந்திரள் முறையீடு, ஆர்ப்பாட்டம் மற்றும் தொடர் போராட்டம்…

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர் சங்கம் (டாக்பியா) சார்பில் பெருந்திரள் முறையீடு, ஆர்ப்பாட்டம் மற்றும் தொடர் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES