Saturday , November 2 2024
Breaking News
Home / செய்திகள் / மதுரை ஐராவதநல்லூரில் 41 வது வார்டு பாஜக சார்பாக சுதந்திர தின விழா.!

மதுரை ஐராவதநல்லூரில் 41 வது வார்டு பாஜக சார்பாக சுதந்திர தின விழா.!

மதுரை மாநகர் மாவட்டம் 41வது வார்டு ஐராவதநல்லூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாரத பிரதமர் மோடி அவர்கள் ஆணைக்கிணங்க மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் 75வது சுதந்திர தின விழா வார்டு தலைவர் ரவிச்சந்திரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

அனுப்பானடி மண்டல் பொதுச் செயலாளர் ராம்தாஸ் முன்னிலை வகித்தார்.. காவல்துறை ஓய்வு ஆய்வாளர் தங்கவேல், கிளைத்தலைவர் சுந்தரபாண்டி சாமி ஆகியோர் தேசிய கொடி ஏற்றி வைத்தனர்..

மாவட்ட கூட்டுறவு பிரிவு துணைத்தலைவர் மீசை முருகேசன் இனிப்பு வழங்கினார்..விழாவில் மாவட்ட மீனவர் அணி துணைத் தலைவர் கார்த்திக் ராஜா, மாவட்ட வர்த்த அணி செயலாளர் கோபாலா கிருஷ்ணன், மாவட்ட மகளிரணி செயலாளர் அம்பிகா, அனுப்பானடி மண்டல் துணைத்தலைவர்கள் ராஜசேகரன், ராஜீவ் காந்தி, செயலாளர் முருகன், மண்டல் கூட்டுறவு தலைவர் மகேசுவரன், துணைத்தலைவர் ராமராஜ், இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் ராஜ மதன், கிளைத்தலைவர்கள் செந்தில்குமார், கார்த்திக், பன்னீர் செல்வம், வண்டு முருகன், மோகன் . திரவியம் , முருகன், சுந்தரபாண்டி, தங்கபாண்டி, மலைச்சாமி, கிளிராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

தொழுநோயாளர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கும் விழா…

01.11.2024 இன்று காலை 11.00 மணியளவில் குளித்தலை அரசு மருத்துவமணை வளாகத்தில் அன்னை தெரசா தொழுநோயாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலப்பணிச் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES