மதுரை பொன்மேனி புதூர் 2- வது தெருவில் விநாயகர் சதுர்த்தி முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு, 62- வது வார்டு பாஜக தலைவர் பிச்சைவேல் தலைமையில் வியாழக்கிழமை அன்று திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
மறுநாள் வெள்ளிக்கிழமை விநாயகர் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு குரு தியேட்டர் அருகே வைகை ஆற்றில் கரைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாஜக மாவட்ட பொருளாளர் ராஜ்குமார், மாவட்ட துணை தலைவர் சத்யம். செந்தில்குமார், மருத்துவரணி மாவட்ட செயலாளர் டாக்டர் கஜேந்திரன், பைபாஸ் ரோடு ஜெயா ஸ்டோர் உரிமையாளர் பழனிவேல், மாவட்ட செயலாளர் ஆர்.கே.பிரகாஷ், 62 வது வார்டு கிளைத்தலைவர் பொன்முருகன், பரவை மண்டல் ஊடகப்பிரிவு தலைவர் அசோக், ஊடகப்பிரிவு செயலாளர் சிவவடிவேல், இளைஞரணி மன்ற செயலாளர் ஜெயச்சந்திரன், 70 வது வார்டு தலைவர் செல்விகிருஷ்ணன், 68 வது வார்டு தலைவர் சசிகுமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்