மலேசியாவைச் சேர்ந்த டத்தோ ஸ்ரீ நடராஜனுக்கு ‘சோழன் உலக சாதனைக்கான’ அங்கீகாரம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்
ஸ்டாண்டிங் ரைடிங் மோட்டார் சைக்கிள் ஹீரோ’என்று அழைக்கப்படும் மலேசியாவைச் சேர்ந்த டத்தோ ஸ்ரீ நடராஜன் பெரியசாமிக்கு இன்று சென்னையில் ‘சோழன் உலக சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதற்கான சான்றிதழை சோழன் உலக சாதனை புத்தக நிறுவனர் டாக்டர் நீலமேகம் நிமலன் மற்றும் பன்னாட்டு MMA மற்றும் கிக்-பாக்சிங் சண்டையாளருமான பாலீ சதீஸ்வர் போன்றோர் தமிழ் நாடு சென்னையில் உள்ள தங்கும் விடுதியில் வைத்து வழங்கினார்கள்.
டத்தோஸ்ரீ நடராஜன் மலேசியா, தாய்லாந்து மற்றும் இலங்கை வரை நீண்ட தூரம் பயணம் செய்த முதல் மனிதன் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தமது மகன் விபத்தில் இறந்ததை அடுத்து தமது மகனின் கண்கள், சிறுநீரகம் மற்றும் இருதயம் ஆகியவற்றைத் தேவைப்பட்டோருக்கு தானம் செய்த பெருமை டத்தோ ஸ்ரீ நடராஜனைச் சேரும்.
தமிழ் நாட்டில் வைத்து உலக சாதனைக்கான அங்கீகாரம் பெற்ற இவரை சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் மலேசிய கிளையின் பொதுத் தலைவர், தலைவர், தலைமைச் செயற்குழுவைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் மாநிலத் தலைவர்கள் என பலரும் வாழ்த்தி தமது பாராட்டைத் தெரிவித்தார்கள்.
.