பிரதமர் மோடி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பாஜக மதுரை 70-வது வார்டு தலைவர் செல்வி கிருஷ்ணன் ஏற்பாட்டில் 3000 பேர்களுக்கு மாபெரும் அன்னதானம்.!
Kanagaraj Madurai
September 16, 2022
செய்திகள்
242 Views
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 72-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை பழங்காநத்தம் மண்டல் பாஜக 70 வது வார்டு தலைவர் செல்வி கிருஷ்ணன் ஏற்பாட்டில் 3000 பேர்களுக்கு மாபெரும் அன்னதானம் நடைபெற உள்ளது. இதுகுறித்து பாஜக 70 வது வார்டு தலைவர் செல்வி கிருஷ்ணன் கூறுகையில்:- இந்தியாவில் நல்லாட்சி நடத்தி வரும் பாரத பிரதமர் மோடி ஜி அவர்களின் 72-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் ஆணைக்கினங்க, மாநகர் மாவட்ட பொறுப்பு தலைவர் மகா.சுசீந்தரன் அவர்களின் ஆலோசனைப்படி,மதுரை பழங்காநத்தம் நேருநகர் பகுதியில் நாளை சனிக்கிழமை 3000 பேர்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்க உள்ளோம். இந்த அன்னதானம் காலை முதல் மாலை வரை நடந்து கொண்டே இருக்கும். பாரத பிரதமர் ஐயா நோய் நொடியின்றி, நலமுடன் வாழ இறைவனை வேண்டி இந்த அன்னதானத்தை நாங்கள் வழங்குகிறோம். இந்த அன்னதானத்தை மாநகர் மாவட்ட பொறுப்புத் தலைவர் மகா சுசீந்திரன் அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார். இந்த மாபெரும் அன்னதானத்தில் பாஜக நிர்வாகிகள், பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.
மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்