பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு மதுரை ஐராவதநல்லூரில் பாஜக வார்டு தலைவர் ரவிச்சந்திர பாண்டியன் தலைமையில் கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.!!
Kanagaraj Madurai
September 20, 2022
செய்திகள்
250 Views
மதுரை ஐராவதநல்லூரில் பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு பாஜக வார்டு தலைவர் ரவிச்சந்திர பாண்டியன் தலைமையில் கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.!! பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 72 வது பிறந்தநாள் முன்னிட்டு, மதுரை மாநகர் 41 வது வார்டு ஐராவதநல்லூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக மாநில தலைவர் அண்ணாமலை, பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கபெருமாள், மாவட்ட தலைவர் மகா சுசிந்திரன் ஆகியோர் உத்தரவுபடி அனுப்பானடி மண்டல் பொறுப்பாளர் மாவட்ட துணைத்தலைவர் ரோஜா ராணி அறிவுறுத்தலின்பேரில் கொடியேற்றி பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு வார்டு தலைவர் ரவிச்சந்திரபாண்டியன் தலைமை வகித்தார். அனுப்பானடி மண்டல் பொதுசெயலாளர் ராம்தாஸ் முன்னிலை வகித்தார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் கோதண்டராமன், கிளைத்தலைவர் முருகன் ஆகியோர் கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.. மாவட்ட கூட்டுறவு பிரிவு சார்பில் மாவட்ட துணைத்தலைவர் மீசை முருகேசன் சுமார் 200 மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கினார். விழாவில் மாவட்ட மீனவரணி துணைத்தலைவர்கள் கார்த்திக்குமார், அருண், மாவட்ட கூட்டுறவு பிரிவு தலைவர் வாசு, மகளிரணி செயலாளர் அம்பிகா, மண்டல் துணைத் தலைவர் ராஜீவ் காந்தி, செயலாளர் முருகன், மண்டல் கூட்டுறவு பிரிவு நிர்வாகிகள் மகேசுவரன், ராம் ராஜ், வெங்கடேசன், கிளைத்தலைவர்கள் சுந்தரபாண்டி, பன்னீர்செல்வம், மோகன், கார்த்திக்ராஜா, தசானம், செந்தில்குமார், பங்கேற்றனர்.
மதுரை மாவட்டச் செய்தியாளர் கனகராஜ்