Sunday , September 8 2024
Breaking News
Home / செய்திகள் / புதிய தொழில் நுட்பங்களின் கண்டுபிடிப்பால் இதய நோய் சிகிச்சை புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது : அப்போலோ மருத்துவமனையின் மூத்த இதய நோய் சிறப்பு நிபுணர் விவேக் போஸ்

புதிய தொழில் நுட்பங்களின் கண்டுபிடிப்பால் இதய நோய் சிகிச்சை புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது : அப்போலோ மருத்துவமனையின் மூத்த இதய நோய் சிறப்பு நிபுணர் விவேக் போஸ்

புதிய தொழில்நுட்பங்களின் கண்டுபிடிப்பால்
இதய நோய் சிகிச்சை புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது
அப்போலோ மருத்துவமனையின் மூத்த இதய நோய் சிறப்பு நிபுணர் விவேக் போஸ் பேட்டி

மதுரை, செப் 24:

மதுரையில் அப்போலோ மருத்துவமனையின் மூத்த இதயநோய் சிறப்பு நிபுணர் விவேக் போஸ் அவர்கள் தெரிவித்ததாவது: இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் இதய ஆஞ்சியோ சிகிச்சை செய்துகொள்கிறார்கள்.
இதயக் குழாய் அடைப்பு உள்ள 70 வயது முதியவர்களைப் பொருத்தவரை சுமார் 90 சதவீதம் ஆண்களுக்கும், 60 சதவீதம் பெண்களுக்கும் இதயக் குழாய்களில் கால்சியம் படிமங்களாலேயே அடைப்பு ஏற்படுகிறது. இந்தப் படிமங்களால் இதயக் குழாய்கள் பாதிக்கப்பட்டு அடைப்பு ஏற்படுவதற்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், புகை பிடித்தல், சிறுநீரக பாதிப்பு மற்றும் அதிக கொழுப்பு ஆகியவை குறிப்பிடத்தக்க காரணங்களாக உள்ளன.


சமீபத்திய காலம் வரை, கால்சியம் படிமம் கொண்ட இதயக் குழாய்களில் ஸ்டென்ட் பொருத்துவது கடினமான பணியாகவே இருந்தது. ஆனால் புதிய இண்ட்ராவாஸ்குலர் லித்தோ டிரிப்சி (IVL) தொழில்நுட்பத்தின் வாயிலாக இத்தகைய கடினமான படிமங்களை பலூன் சாதனத்தின் உதவியுடன் நீக்க முடிகிறது. இதனால் ஸ்டென்ட்களையும் எளிதாகப் பொருத்த முடிகிறது.


இது ஒருபுறமிருக்க தற்போது அறிமுகமாகி உள்ள ஸ்டென்டின் அதிநவீன வடிவமான பயோ அப்சார்பபிள் ஸ்கஃபோல்ட் சாதனமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் இதய சுற்றோட்டத்தில் ஸ்டென்ட் போன்ற எந்த உலோக சாதனமும் 3 ஆண்டுகளுக்கு மேல் நீடித்திருக்க முடியாது. இதயக் குழாய்கள் குறிப்பிட்ட காலத்தில் தங்கள் இயல்பான அளவு, செயல்பாட்டுக்கு திரும்பிவிடும்.
அதேபோல இதயக் குழாய்களின் உட்பகுதியை துல்லியமாக பரிசோதனை செய்வதற்கு இண்ட்ராவாஸ்குலார் அல்ட்ராசவுண்ட் (IVUS) மற்றும் ஆப்டிகல் கொஹிரண்ஸ் டோமோகிராபி (OCT) ஆகிய ஸ்கேனிங் சாதனங்கள் உதவிகரமாக இருக்கின்றன.
இதய வால்வு நோய்களைப் பொருத்தவரை, நான் சர்ஜிகல் அல்லது டிரான்ஸ் வால்வு என அழைக்கப்படும் அறுவை சிகிச்சை இல்லாமல் வால்வுகளைப் பொருத்தும் முறையானது புரட்சிகரமான கண்டுபிடிப்பாக உள்ளது. சமீபத்திய காலம் ஆர்டிக் இதயக் குழாயில் ஏற்படும் ஸ்டெனோசிஸ் எனப்படும் ரத்தக் கசிவு பிரச்சினைக்கு அறுவை சிகிச்சையின் வாயிலாக செயற்கை வால்வை மாற்றுவது தான் தீர்வாக இருந்தது. ஆனால் தற்போது மயக்கமருந்தோ, அறுவை சிகிச்சையோ இல்லாமல் நுண்குழாயில் வால்வைப் பொருத்தி அதனை இதயப் பகுதியில் சரியாகப் பொருத்த முடிகிறது. இந்தத் தொழில்நுட்பமானது மிகப்பெரிய நம்பிக்கை அளித்திருப்பதுடன் எதிர்காலத்தில் இதய வால்வு நோயாளிகளுக்கான சிகிச்சை முறையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதய நோயியல் துறையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப மேம்பாடுகள் சிக்கலான சிகிச்சை வழிமுறைகளை மாற்றி, எளிதான, பாதுகாப்பான அதேவேளையில் வேதனை குறைவான சிகிச்சைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்தப் புதிய முறைகள் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை மற்றும் குணமளிக்கக்கூடியவையாக உள்ளன என்று தெரிவித்தார்.


அப்போலோ மருத்துவமனை மதுரை மண்டல முதன்மை இயக்க அலுவலர் நீலக்கண்ணன் அவர்கள் உலக இருதய தின வாழ்த்துக்களை கூறி அனைவரும் இருதய நலத்தை காப்பது அவசியம் எனவும் திருச்சி அப்போலோ மருத்துவமனை பச்சிளம் குழந்தைகளுக்கான இருதய சிகிச்சை முதல் அனைத்து வயதினருக்கும் ஏனைய இருதய பிரச்சனைகளுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில் கைதேர்ந்த மருத்துவர்கள் மற்றும் உபகரணங்கள் கொண்டது எனக் கூறினார்


மேலும் செய்தியாளர் சந்திப்பின்போது மதுரை மண்டல, முதன்மை இயக்க அலுவலர் நீலக்கண்ணன், மார்கெட்டிங் பிரிவு பொது மேலாளர் மணிகண்டன் மற்றும் மருத்துவ சேவை இணை இயக்குநர் பிரவீன்ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

தந்தையை இழந்த கல்லூரி மாணவனுக்கு ஒரு லட்சம் நிதியுதவி வழங்கிய சிங்கப்பூர் குரு சித்தம் பெருங்குடில் அமைப்பின் நிறுவனர்…!

சிவகங்கை மேலமங்கத்தில் வசித்து வரும் கனரக ஊர்தி ஓட்டுநரான ஜோர்ஜ் டோமினிக்(49)அவர்கள் கடந்த மாதம் மாரடைப்பால் மரணமடைந்தார். இவரது மூத்த …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES