தென்னிந்திய பாராம்பரிய சிலம்பாட்ட கழகம் மற்றும் வி.கே.எஸ் சிலம்பம் சார்பாக மதுரை மாவட்டம் அழகர் கோவில் ரோடு, அரிட்டாபட்டி அருகே சண்முகநாதபுரம், வல்லாளபட்டியில் உள்ள நியூட்டன் நர்சரி பிரைமரி பள்ளியில் நாளை (09/10/2022) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் மாநில அளவிலான மாபெரும் சிலம்பாட்ட போட்டி நடைபெற உள்ளது.
இதில் தமிழகத்தில் இருந்து அனைத்து மாவட்டங்களிலும் இருந்து 30க்கும் மேற்பட்ட சிலம்ப ஆசான்கள் மற்றும் 600க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு கேடயம், பதக்கம்,சான்றிதழ் மற்றும் முதல் பரிசு பெறும் மாணவ, மாணவிகளுக்கு ரேஞ்சர் சைக்கிள் வழங்க உள்ளார்கள். சிலம்பம் ஆசான்களை ஊக்குவிக்கும் விதமாக வெள்ளி நாணயம் வழங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போட்டிக்கு நியூட்டன் வாழ்க்கை மழலையர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரபாண்டியன் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் சங்க செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் தலைமை தாங்குகின்றனர்.
தென்னிந்திய பாராம்பரிய சிலம்பாட்ட கழக தலைவர் முன்னாள் ராணுவ வீரர் வேணுகோபால், செயலாளர் மில்டன் சைக்கி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், ரூபா நர்சரி, பிரைமரி பள்ளி தலைமை ஆசிரியர் சூரிய நாராயணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக சரவணன், ஆளவந்தார், முருகானந்தம், ராமகிருஷ்ணன், சுந்தரம்,கராத்தே மூவேந்தர், கராத்தே ராஜா, அன்பு குழந்தைவேல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தென்னிந்திய பாராம்பரிய சிலம்பாட்ட கழகத்தின் மதுரை மாவட்ட தலைவரும், வி.கே.எஸ் சிலம்பம் பள்ளியின் பயிற்சியாளருமான சிலம்பம் சண்முகவேல் செய்து வருகிறார்.
சிலம்பாட்ட போட்டி குறித்து தொடர்பு கொள்ள : 99944-86231