கோவை ஒரு பெருமைக்குறிய தொழில் நகரம். மோடியின் மோசமான ஆட்சியில் தொழில்கள் சிதைந்து விட்டன. லட்சக்கணக்கானவர்கள் வேலை இழந்துள்ளனர். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, மதவெறி பிடித்த, கலவர பாஜக, பொறுப்பற்ற முறையில், கோவையை தீவிரவாத நகரமாக சித்தரிப்பது கடுமையான கண்டனத்துக்குரியது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் பொறுப்புமிகுந்த அரசு, குற்றவாளிகளை பிடிக்க விரைந்து செயல்பட்டுள்ளது. முறையான,விரைவான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் பாஜக மலிவான அரசியல் செய்வது அவமானகரமானது. மோடி, பாஜக ஆட்சியைப் போல சீனாவைக் கண்டு அஞ்சி நடுங்குகிற, தீவிரவாத குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர்களை நாடாளுமன்ற உறுப்பினராக்கி அழகு பார்க்கிற ஆட்சி தமிழகத்தில் நடக்கவில்லை. பாஜகவின் கலவர அரசியலை மீறி தமிழகம் தொடர்ந்து அமைதிப்பூங்காவாகவே இருக்கும் - ஜோதிமணி, கரூர், எம்.பி.
Home / செய்திகள் / பாஜகவின் கலவர அரசியலை மீறி தமிழகம் தொடர்ந்து அமைதிப்பூங்காவாகவே இருக்கும் – ஜோதிமணி, கரூர், எம்.பி
Check Also
தந்தையை இழந்த கல்லூரி மாணவனுக்கு ஒரு லட்சம் நிதியுதவி வழங்கிய சிங்கப்பூர் குரு சித்தம் பெருங்குடில் அமைப்பின் நிறுவனர்…!
சிவகங்கை மேலமங்கத்தில் வசித்து வரும் கனரக ஊர்தி ஓட்டுநரான ஜோர்ஜ் டோமினிக்(49)அவர்கள் கடந்த மாதம் மாரடைப்பால் மரணமடைந்தார். இவரது மூத்த …