Thursday , September 12 2024
Breaking News
Home / செய்திகள் / மாற்றுத்திறனாளிகள் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சச்சின் சிவாவுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பாராட்டு.!!

மாற்றுத்திறனாளிகள் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சச்சின் சிவாவுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பாராட்டு.!!

மாற்றுத்திறனாளிகள் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சச்சின் சிவாவுக்கு கேடயம் பரிசு அமைச்சர் முன்னாள் அமைச்சர் உதயகுமார் வழங்கினார்


தேவரின் தங்க கவச விவகாரத்தில் எங்கள் தரப்பிற்கு எதிராக பல சூழ்ச்சிகள் செய்யப்பட்டது, எதிர் வரும் காலங்களில் பசும்பொன்னுக்கு எடப்பாடி பழனிச்சாமி வருவார் என மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
மதுரை காந்தி மியூசியத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் சச்சின் சிவாவுக்கு மதுரை பாரதி யுவகேந்திரா அமைப்பு சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு தலைமை தாங்கினார் தமிழக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சச்சின் சிவாவுக்கு சால்வை மற்றும் மாலை அணிவித்து கேடயம் பரிசு வழங்கி பாராட்டினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார் கூறுகையில் “வட கிழக்கு பருவ மழை நாளை முதல் தொடங்க உள்ளது, அரசின் மெத்தன போக்கினால் மழை நீர் வடிகாலில் செய்தியாளர் விழுந்து இறந்துள்ளார், வட கிழக்கு பருவ மழை முன்னேற்பாடுகள் தமிழக அரசு முறையாக செய்ய வேண்டும், பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு செய்ய வேண்டும், திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் தமிழகத்தில் தீவிரவாதம் தலை தூக்குகிறது, கோவையில் 1998 ல் 11 இடங்களில் குண்டு வெடிப்பு நடந்ததில் இருந்தே மக்கள் மீளவில்லை, அதிமுக ஆட்சி காலங்களில் பயங்கரவாதம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது,

சோற்றில் பூசனிக்காயை மறைப்பது போல அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் ஒன்றும் நடக்கவில்லை என பேசி வருகிறார், கோவை சம்பவத்தை நாம் சாதாரணமாக கடந்து போக முடியாது, அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது, கோவை சம்பவம் குறித்து முதல்வர் மவுனம் கலைத்து பேச வேண்டும், தீவிரவாதம், பயங்கரவாதத்துக்கு எதிராக திமுக தலைமையிலான அரசு வேடிக்கை பார்த்தால் திமுக ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்படுவார்கள், திமுக இந்தி திணிப்புக்கு எதிராக நடத்தும் போராட்டம் மடை மாற்றும் செயல், தமிழுக்கு ஆபத்து என திமுக பேசி வருகிறது, தமிழை அதிமுக மட்டுமே பாதுகாத்து வருகிறது,

தமிழுக்கு ஒரு பிரச்சினை என்றால் அதிமுக முதலில் நிற்கும், அதிமுக ஆட்சியில் திமுக அர்த்தமில்லாமல் 40,000 போராட்டங்கள் நடத்தியது, எடப்பாடி பழனிச்சாமி தென் தமிழகத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைகளுக்கு மரியாதை செய்து உள்ளார், 2017 ல் தேவரின் தங்க கவசம் எடுப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி மதி நுட்பத்தோடு செயல்பட்டார், தேவரின் தங்க கவச விவகாரத்தில் எங்கள் தரப்பிற்கு எதிராக பல சூழ்ச்சிகள் செய்யப்பட்டது, எதிர் வரும் காலங்களில் பசும்பொன்னுக்கு எடப்பாடி பழனிச்சாமி வருவார், சலசலப்பு, சச்சரவுக்கு எதிராக எடப்பாடியார் அஞ்ச மாட்டார், ஒ.பி.எஸின் பலம் என்ன பலவீனம் என்ன என்பது மக்களுக்கு தெரியும், தேனி மாவட்டத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது இதுவே ஒ.பி.எஸின் செல்வாக்கு, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக நிறுத்தி ஒன்றரை இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக தோல்வியடைந்தது,

ஒ.பி.எஸ் எந்தவொரு தேர்தல்களிலும் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்படவில்லை, ஒ.பி.எஸ் தன்னை முன்னிலைப்படுத்தும் யுக்திகள் தோல்வியில் முடியும், 50 ஆண்டுகளில் அதிமுக தோல்வியையும், வெற்றியையும் சந்தித்துள்ளது, அதிமுகவில் எதுவும் நிரந்தரமில்லை, விழ்வதும், வெல்வதும் தொண்டர்கள், மக்கள் கையில் உள்ளது, எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக புதிய வரலாறு படைக்கும்” என கூறினார்.
Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

தந்தையை இழந்த கல்லூரி மாணவனுக்கு ஒரு லட்சம் நிதியுதவி வழங்கிய சிங்கப்பூர் குரு சித்தம் பெருங்குடில் அமைப்பின் நிறுவனர்…!

சிவகங்கை மேலமங்கத்தில் வசித்து வரும் கனரக ஊர்தி ஓட்டுநரான ஜோர்ஜ் டோமினிக்(49)அவர்கள் கடந்த மாதம் மாரடைப்பால் மரணமடைந்தார். இவரது மூத்த …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES