தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கம், மதுரை மாநகராட்சி அனைத்து பணியாளர்கள் சங்கம் இணைந்து நடத்திய மாபெரும் மாலை நேர கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.!
Kanagaraj Madurai
November 4, 2022
செய்திகள்
186 Views
மதுரையில் தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கம், மதுரை மாநகராட்சி அனைத்து பணியாளர்கள் சங்கம் இணைந்து நடத்திய மாபெரும் மாலை நேர கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள 20 மாநகராட்சிகளில், நிரந்தர பணியாளர்களின் 90% குறைப்பதையும் தனியார் மூலம் ஒப்பந்த பணியாளர்கள் நியமிக்கும் அரசாணை எண் 152 ஐ ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கம், மதுரை மாநகராட்சி அனைத்து பணியாளர்கள் சங்கம், மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்கம் (சிஐடியூ) இணைந்து நடத்திய மாபெரும் மாலை நேர கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகை முன்பு நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைச் செயலாளர் சி.எம் மகுடீஸ்வரன் தலைமை வகித்தார். மதுரை மாநகராட்சி அனைத்து பணியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி, மாநிலத் துணைத் தலைவர் பஞ்சவர்ணம், பொறியியல் பிரிவு சங்க அவைத்தலைவர் தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தர் சங்கத் துணைத் தலைவர் சின்னச்சாமி வரவேற்புரை ஆற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நீதிராஜா, நெடுஞ்சாலைத்துறை மாநில பொருளாளர் இரா.தமிழ், சிஐடியு தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் அனைத்து பணியாளர்கள் சங்க தலைவர் செந்தில்குமரன், கூட்டுறவு அலுவலர் சங்கத் தலைவர் கே.கண்ணன், பொறியியல் பிரிவு பணியாளர்கள் சங்க பொருளாளர் கே.துரைக்கண்ணன், துணைச் செயலாளர் பழனிக்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்