மதுரை கீழக்குயில்குடி நான்கு வழிச்சாலை அருகே சீனிவாசா காலனியில் உள்ள பாஜக விவசாய அணி அலுவலகத்தில், விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜன் மற்றும் மாநில துணைத் தலைவர் எஸ்.ஆர்.தேவர் ஆகியோர் வழிகாட்டுதலின் படி, நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினர் செந்தூர் பாண்டியன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் விவசாய அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமிப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது அதிமுக வழக்கறிஞர் பிரிவு மதுரை புறநகர் மாவட்ட இணைச் செயலாளர் வக்கீல் தர்மர் பாஜக விவசாய அணியில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்நிகழ்வில் விவசாய அணி முன்னாள் மாநகர் தலைவர் முத்துப்பாண்டி, முன்னாள் புறநகர் மாவட்ட தலைவர் பூமிராஜன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்