மதுரையில் இயங்கி வரும் THE KING RASHID INTERNATIONAL COLLEGE சார்பாக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு YMCA பள்ளியில் காது கேளாத குழந்தைகளுடன் கொண்டாடினர். இந்த நிகழ்வில் கல்லூரியின் நிறுவனர் முனைவர் k ஜாபர் ஷெரிப், பள்ளியின் முதல்வர் ஜொய்ஸ் மேரி மற்றும் ஆசிரியர் பெருமக்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவினை கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜாஹிர் ஹுசைன், விமான பொறியாளர் அம்ஜத் ஹுசைன், கல்லூரியின் பொறுப்பாளர்கள் ஷாகுல் ஹமீது மற்றும் சூர்யா மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். கல்லூரியின் நிறுவனர் அவர்கள் இந்த விழாவை வழிநடத்திய இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவி ஈஷா பிரியதர்ஷினி மற்றும் அணைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.