மதுரை ஜெய்ஹிந்த்புரம் வீட்டு உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் 16-வது ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் தலைவர் மலர்பாண்டியன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பொருளாளர் சுகுமார், துணைத்தலைவர் கணேசன், மகளிர் பிரிவு கயர்நிஷாகபீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சுப்புராம் வரவேற்புரை ஆற்றினார்.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ மற்றும் துணை மேயர் நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
இந்விகழ்வில் மாமன்ற உறுப்பினர்கள் எஸ்.வி.முருகன், லக்சிகா ஸ்ரீ, காவேரி, எஸ்.எம்.டி ரவி, தமிழ்ச்செல்வி மற்றும் என்.எம் மாரி, பென்குயின் நடராஜன், நல்லதம்பி, செல்வராஜ், சண்முகசுந்தரம், வேல்பாண்டி
ஆலோசகர்கள் நரசிங்கம், கோபால், சட்ட ஆலோசகர்கள் மரியவினோலா, வெங்கட்ராமன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.