Saturday , November 2 2024
Breaking News
Home / செய்திகள் / மதுரை தெற்கு, வடக்கு ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

மதுரை தெற்கு, வடக்கு ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

மதுரை தெற்கு வடக்கு ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம்! – 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான டிச.06 அன்று பாசிச எதிர்ப்பு தினம் என்ற பெயரில் தமிழகம் உள்பட நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

அதனடிப்படையில் மதுரை தெற்கு வடக்கு ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதுரை தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர் வரவேற்புரை ஆற்றினார்.
வடக்கு மாவட்ட துணைத் தலைவர் ஜாபர் சுல்தான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில மாவட்ட தொகுதி முன்னணி அமைப்பினுடைய நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர்
நிஜாம் முகைதீன்,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வெ.கனியமுதன்,
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் செ.வெற்றி குமரன்,
மக்கள் கண்காணிப்பகம் நிறுவனர் வழக்கறிஞர் ஹென்றி டிபேன்,
அ.தி.ம.மு.க தலைவர் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன்
ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

வழிபாட்டுத் தலங்கள் சட்டம்-1991 ஐ வலுவாக அமல்படுத்தி அனைத்து வழிபாட்டுத்தலங்களையும் ஒன்றிய, மாநில அரசுகளும், நீதித்துறையும் பாதுகாக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.

இறுதியாக மதுரை தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது நன்றியுரை ஆற்றினார்
ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

தொழுநோயாளர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கும் விழா…

01.11.2024 இன்று காலை 11.00 மணியளவில் குளித்தலை அரசு மருத்துவமணை வளாகத்தில் அன்னை தெரசா தொழுநோயாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலப்பணிச் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES