மதுரையில் “தேசிய மனித உரிமைகள்- சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் அமைப்பு சார்பாக சமூக சேவகர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா.!
Kanagaraj Madurai
December 15, 2022
செய்திகள்
250 Views
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, மதுரையில் “தேசிய மனித உரிமைகள்- சமூக நீதி கவுன்சில் ஆஃப் இந்தியா குளோபல் அமைப்பு மாநில தலைவர் டாக்டர் நம்புதாளை பாரீஸ் அவர்களின் ஆலோசனைப்படி, புதிதாக நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு அங்கீகார சான்றிதழ், அடையாள அட்டை வழங்கும் விழா மற்றும் சமூகசேவகர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா மதுரை மாவட்ட தலைவர் முனைவர் ஆர்.பிச்சைவேல் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ராஜ்குமார் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் வடக்கு மாவட்ட தலைவராக புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட வி.பி.ஆர் செல்வகுமாருக்கு அங்கீகார சான்றிதழ் அடையாள அட்டை வழங்கி நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் இந்நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர்கள் டாக்டர் ஜமாலூதீன், முஜிபூர்ரகுமான், மாநில துணைத்தலைவர் டாக்டர் கஜேந்திரன், மாநில இணைச் செயலாளர்கள் ரகுபதி,ஜெகநாதன்,மாநில ஆலோசகர் முன்னாள் டி.எஸ்.பி குசலவன், மாநில சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சத்தியமூர்த்தி, மாநில செயலாளர் கீதா முருகன், மாநில மகளிரணி துணைத்தலைவி மருத்துவர் குருலட்சுமி கஜேந்திரன், மாவட்ட ஆலோசகர்கள் முன்னாள் ராணுவ வீரர் இராமன், ஆறுமுகம் கலந்து கொண்டனர்.