Thursday , November 7 2024
Breaking News
Home / செய்திகள் / தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் 18-ஆயிரம் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய முதலமைச்சருக்கு கோரிக்கை.!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் 18-ஆயிரம் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய முதலமைச்சருக்கு கோரிக்கை.!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் 18-ஆயிரம் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் 38 மாவட்ட விநியோக வட்டங்களில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் 10 வருடங்களுக்கும் மேலாக பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களை அடையாளப்படுத்தி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக திருவண்ணாமலை வேங்கிக்கால் சமுதாயக் கூடத்தில் முதல் கட்டப் பட்டியல் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒப்பந்த தொழிலாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மகேந்திரன் , ஏழுமலை, பாலா (எ)பாலச்சந்தர், சபீர் ஆகியோர் தலைமை வகித்தனர்.

மேலும் ஒப்பந்த ஊழியர்களிடம் இருந்து பணி நிரந்தரம் செய்வதற்கான கோரிக்கை மனுக்களை, தமிழக ஒருங்கிணைப்பாளர்கள் ஏழுமலை, பாலச்சந்திரன், மகேந்திரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் ஏழுமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

தமிழக மின்சார வாரியத்தில் மின் கம்பம் நடுதல், மின்சாதன பொருட்களை சரி செய்து கொடுப்பது போன்ற பணிகளில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 1200 தொழிலாளர்கள் பணி செய்கின்றனர். ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் மின்வாரியம் கண்டு கொள்ளாமல் உள்ளது.

மேலும் ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிவோருக்கு மின்சார வாரியம் நிர்ணயித்துள்ள 380 ரூபாய் கூலியை நேரடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொழிலாளர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைக்க உள்ளோம் எனக் கூறினார்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர் சங்கம் (டாக்பியா) சார்பாக பெருந்திரள் முறையீடு, ஆர்ப்பாட்டம் மற்றும் தொடர் போராட்டம்…

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர் சங்கம் (டாக்பியா) சார்பில் பெருந்திரள் முறையீடு, ஆர்ப்பாட்டம் மற்றும் தொடர் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES