Tuesday , September 10 2024
Breaking News
Home / செய்திகள் / தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்

தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்

தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.

மாநில ஒருங்கிணைப்பாளர்
முருகானந்தம்
மாநில ஒருங்கிணைப்பாளர்கள் , ஐவன்,கே.டி.துரைக்கண்ணன்,பஞ்சவர்ணம், சரவணன், செந்தில்குமார்,
மோகன்,பிரபாகரன் மற்றும் மாநில செய்தி தொடர்பாளர் தாமோதரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் சி.எம்.மகுடீஸ்வரன்,
ஆர்.குமரவேல், சக்திவேல்,
செந்தில்குமார்,
மதிவாணன், உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட நகராட்சி மாநகராட்சி ஊழியர்கள் பங்கேற்றனர்.

பணியிட மாறுதல்களை கலந்தாய்வு மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும். அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் வழங்கிட வேண்டும்.
எல்லை விரிவாக்க பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். செயல் திறனற்ற பணியாளர்களுக்கு ஊதிய விகிதம் 5200-20200+1900 வழங்கிட வேண்டும்.

அலுவலக நேரத்தில் ஆய்வு கூட்டங்களை நடத்திட வேண்டும். விடுமுறை நாட்களில் கூட்டம் நடத்துவதை கைவிட வேண்டும். அரசாணை எண் 152 மற்றும் அரசாணை எண் 10ல் விடுபட்ட பணியிடங்களை வழங்கிட வேண்டும்.

நகராட்சி மாநகராட்சி ஊழியர்களுக்கு கொரோனா ஊக்க ஊதியம் வழங்கிட வேண்டும். 1.101996க்கு முன்பாக பணியில் சேர்ந்த தினக்கூலி பணியாளர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் வழங்கிட வேண்டும்.
அலுவலக உதவியாளர்கள், குடிநீர் பிரிவு ஊழியர்கள், செயல் திறனற்ற பணியாளர்களுக்கு கல்வித் தகுதி அடிப்படையில் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.

நகராட்சி தரத்திற்கு கேற்றார் போல் வழங்கப்பட்டுள்ள வருவாய் உதவியாளர் பணியிடங்களை வரி விதிப்பு எண்கள் எண்ணிக்கைகளின் அடிப்படையில் நகராட்சி மாநகராட்சிகளில் வருவாய் உதவியாளர் பணியிடங்களை தோற்றுவிக்கப்பட வேண்டும்.
பணி ஓய்வு பெறும் நாளில் பணி பயன்களை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி

(05.10.2023) அன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டமும்,
( 17.10.2023) அன்று மண்டல அளவில் உண்ணாவிரதமும்
( 15.11.2023) அன்று மாநில அளவில் காத்திருப்பு போராட்டம் நகராட்சி நிர்வாக இயக்குநர் அலுவலகம் முன்பாக நடத்துவது எனவும்,
20.9.2023 அன்று மாண்புமிகு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர், நகராட்சி நிர்வாக இயக்குனர், மற்றும் அரசு செயலாளர் அவர்களை ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் நேரில் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

தந்தையை இழந்த கல்லூரி மாணவனுக்கு ஒரு லட்சம் நிதியுதவி வழங்கிய சிங்கப்பூர் குரு சித்தம் பெருங்குடில் அமைப்பின் நிறுவனர்…!

சிவகங்கை மேலமங்கத்தில் வசித்து வரும் கனரக ஊர்தி ஓட்டுநரான ஜோர்ஜ் டோமினிக்(49)அவர்கள் கடந்த மாதம் மாரடைப்பால் மரணமடைந்தார். இவரது மூத்த …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES