கோவை மாவட்டம்
மேட்டுப்பாளையத்தில்
இரண்டு நாட்களாக நடைபெற்ற
தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆசிரியர் காப்பாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கயல்விழி
செல்வராஜ் பங்கேற்று சிறப்பித்தார்
தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆசிரியர் காப்பாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த வாரம் செப்.28.மற்றும் 29 ஆகிய இரு தினங்களில் நடைபெற்றது.
செப்.28-ந் தேதி
தியாகி இம்மானுவேல் சேகரனார் அரங்கில் நடைபெற்ற
முதல்நாள் நிகழ்ச்சிக்கு
ஆசிரியர் காப்பாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில மகளிரணி தலைவி சாரதா தலைமை தங்கினார்.
கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர்,
முத்தாரம் வரவேற்புரை ஆற்றினார்.
மேட்டுப்பாளையம் நகரமன்ற துணைத்தலைவர் அருள்வடிவு குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
மாநிலத் துணைத் தலைவர் ரஜினிகாந்த் மற்றும் மாநில மகளிரணி துணைச் செயலாளர்
சரவணா செல்வி ஆகியோர் இணைந்து நிகழ்ச்சியில்
தொகுப்புரை ஆற்றினர்.
இதனை தொடர்ந்து நடைபெற்ற ‘நிகழ்ச்சியில் சங்கத்தின் எதிர்கால திட்டமிடுதல் குறித்து சங்கத்தின் மாநில மகளிரணி செயலாளர் முத்துச்செல்வி, மாணவர்களிடத்தில் ஆசிரியைகளின் செயல்பாடு குறித்து திருச்சி மாவட்ட மகளிரணி செயலாளர் சரஸ்வதி, சங்கத்தில் ஆசிரியைகளின் செயல்பாடு குறித்து சங்கத்தின் மாநில துணை தலைவர் ஆதவன், சமூகத்தில் மகளிரின் செயல்பாடு குறித்து கோவை மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர் செல்வி. பிரியா ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
இறுதியில் மாநில மகளிரணி துணை செயலாளர் சாந்தி நன்றி உரையுடன் முதல் நாள் நிகழ்வு பெற்றது.
இரண்டாம் நாள் நிகழ்வு செப்.29-ந் தேதியன்று காலை 9.30 மணியளவில் தந்தை ஈ.வெ.ர. பெரியார் அரங்கில் மாநில ஒருங்கிணைப்பாளர் சரவணக்குமார் தலைமையில் துவங்கியது.
இந்த நிகழ்ச்சிக்கு மாநில இணை ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் வரவேற்புரையாற்றினார். மதுரை மாவட்ட செயலாளர் கருப்பையா தொகுப்புரை வழங்கினார்.
தொடர்ந்து சங்கத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து மாநில இணைய ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் உரையாற்றினார்.
மாநில பொதுக்குழு தீர்மானங்களை மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சின்னதுரை வாசிக்க தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
முடிவில் மாநில பொருளாளர் முருகன் சங்கத்தின் வரவு – செலவு அறிக்கையினை வாசித்தார்.
இதனை தொடர்ந்து
மாநில மற்றும் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களுக்கும், சிறப்பு அழைப்பாளர்களுக்கும் நினைவு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
சிறிது நேரம் தேநீர் இடைவேளைக்கு பிறகு மாநில பொதுக்குழுவின் அடுத்த நிகழ்ச்சி நண்பகல் 11.15 மணியளவில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கார் அரங்கில் மாநில தலைவர் பூவலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் வரவேற்புரையாற்றினார்கள். திருச்சி மாவட்ட செயலாளர் பிரேம்குமார் தொகுப்புரை வழங்கினார். இந்த நிகழ்வில் ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் தி கயல்விழி செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சிறப்புரை வழங்கினார்.
இதனை தொடர்ந்து, மேட்டுப்பாளையம் நகர்மன்றதலைவர் மெகரிபா பர்வீன், கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொ.அ. ரவி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் முனியசாமி , மேட்டுப்பாளையம் நகர செயலாளர் முஹம்மது யூனுஸ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஒய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரி உத்திராபதி மற்றும் தமிழக அரசின் முதன்மை கணக்கு அலுவலர் முனியசாமி ஆகியோர்
கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.ம்ம்ஞ்மம்ம்பள
தொடர்ந்து, சங்கத்தின் மாநில தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் சங்கத்தின் கோரிக்கைகள் மற்றும் தீர்மானங்களை முன் மொழிந்தார். திருச்சி மாவட்ட தலைவர் செந்தில், கன்னியாகுமரி மாவட்ட தலைவர் மணிகண்டன், விழுப்புரம் மாவட்ட தலைவர் குமரேசன் ஆகியோர் சங்கத்தின் எதிர்காலத் திட்டமிடல் குறித்து மதிப்புமிக்க கருத்துகளை பதிவு செய்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கயல்விழி செல்வராஜ், சங்கத்தின் முக்கியமான, நியாயமான கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.
சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சங்கர சபாபதி தலைமையில் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்ந்த கோரிக்கைகள் மற்றும் அறிக்கைகள் வெளியிடப்பட்டு அமைச்சர் கயல்விழி செல்வராஜிடம் கோரிக்கைகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மேட்டுப்பாளையம் நகர்மன்றத் தலைவர் மற்றும் தோழமை சங்கத்தலைவர்கள் அனைவருக்கும் நினைவு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
தொடர்ந்து, தோழமை சங்க நிர்வாகிகள் விவேக், சுதாகர், திருக்குமரன், துரை கருணாநிதி, தாமஸ், நிர்வாக சங்கத்தின் மாநில தலைவர் விஜயகுமார், பொதுச் செயலாளர் அருண், டேனியல், ராஜன்சிங் , நிர்வாக ஊழியர் சங்க முன்னாள் தலைவர் ராஜசேகரன், SC மற்றும் ST வருவாய் துறை சங்க நிர்வாகி தனலட்சுமி, கோவை தனி வட்டாட்சியர் மாலதி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
நிகழ்வின் இறுதியில் மாநில செய்தி ஊடக பிரிவு செயலாளர் சிங்கபாண்டி அனைவருக்கும் நன்றி கூறினார்.
தமிழகம் முழுவதிலும் பல்வேறு மாவட்டங்களில்
இருந்து சுமார் 600 க்கும் மேற்பட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் தங்கும் அறைகள் மற்றும் பொதுக்குழு கூட்டம் சிறப்பாக நடைபெறுவதற்கு முன்னெடுத்து சென்ற கோவை மாவட்ட தலைவர் ஜெகதீஸ்வரன், செயலாளர் ரமேஷ், பொருளாளர் ஜெயசந்திரன், மாநில நிர்வாகிகள் அன்பழகன் மகேந்திரன் உள்ளிட்ட கோவை மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும் மாநில சங்கத்தின் சார்பாக நன்றியும், பாராட்டுக்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.
இளைஞர் குரல் செய்திகளுக்காக தலைமை செய்தியாளர் கனகராஜ்…