Thursday , September 12 2024
Breaking News
Home / செய்திகள் / 12/10/2023 அன்று சிறை நிரப்பும் போராட்டம் : தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் அறிவிப்பு.!

12/10/2023 அன்று சிறை நிரப்பும் போராட்டம் : தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் அறிவிப்பு.!

மதுரையில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பாக எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை அம்பிகா தியேட்டர் அருகே தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பாக பல்நோக்கு சேவை மையம் திட்டத்தின் கீழ் தேவையற்ற வேளாண் உபகரணங்கள் டிராக்டர், லாரி, பிக்கப் வேன், நெல் அறுவடை இயந்திரம், கரும்பு அறுவடை இயந்திரம் போன்ற வாகனங்களை வாங்க கட்டாயப்படுத்தி அமல்படுத்துவதை கைவிடுதல் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மதுரை மண்டல அளவிலான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல்,தேனி ஆகிய மாவட்டங்களில் இருந்து 2.500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் காமராஜ் பாண்டியன் தலைமை வகித்தார்.

ஓய்வு பெற்றோர் சங்க மாநில துணைத்தலைவர் உதயகுமார் மற்றும் செய்தி தொடர்பு செயலாளர் ஆ.ம.ஆசிரியதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகர கூட்டுறவு கடன் சங்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களின் ஊதிய குழுவின் அறிக்கை இணை விரைவில் பெற்று ஊதிய உயர்வு உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும்.

சங்கங்களின் தவணைத் தவறிய நகைகளை ஏலமிட்ட வகையில் ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகையினை நட்ட கணக்கிற்கு கொண்டு செல்லும் வகையில் நிபந்தனைகளை தளர்த்தி புதிய உத்தரவு பிறபிக்கப்பட வேண்டும்.

சங்கங்களில் உள்ள காலி பணியிடங்களை விரைவில் நிரப்பிட வேண்டும்.

பயிர் கடன் தள்ளுபடியில் விதிமீறல் எனக்கூறி செயலாளர்களின் பணி ஓய்வு காலத்தில் ஓய்வு கால நிதி பயன்களை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

25/2/2001க்கு பின்னர் பணி ஓய்வு பெற்ற அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க ஆணை பிறப்பிக்கப்பட வேண்டும்.

பணியாளருக்கு பதவி உயர்வு வழங்குவதில் உள்ள நடைமுறை பிரச்சனைகளை நீக்கி அனைவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர்.

இந்தக் கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் 12/10/2023 அன்று மாநிலம் முழுவதும் சுமார் 40,000 பணியாளர்கள் 7 மண்டலங்களில் இருந்து கலந்து கொண்டு சிறை நிரப்பும் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.என நிர்வாகிகள் கூறினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாவட்ட செயலாளர் கணேசன், தேனி மாவட்ட தலைவர் அருணகிரி, திண்டுக்கல் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், சிவகங்கை மாவட்ட செயலாளர் யோகசரவணன், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், ஓய்வு பெற்றோர் சங்கத்தின் சார்பாக மாவட்ட நிர்வாகிகள் மதுரை திருச்சிற்றம்பலம், சிவகங்கை பிரிட்டோ, ராமநாதபுரம் முத்துராமலிங்கம், புதுக்கோட்டை நெடுமாறன், திண்டுக்கல் சுப்பையா, தேனி முருகன் மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மதுரை மாவட்ட பொருளாளர் பாரூக் அலி நன்றி கூறினார்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை மாவட்ட செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

தந்தையை இழந்த கல்லூரி மாணவனுக்கு ஒரு லட்சம் நிதியுதவி வழங்கிய சிங்கப்பூர் குரு சித்தம் பெருங்குடில் அமைப்பின் நிறுவனர்…!

சிவகங்கை மேலமங்கத்தில் வசித்து வரும் கனரக ஊர்தி ஓட்டுநரான ஜோர்ஜ் டோமினிக்(49)அவர்கள் கடந்த மாதம் மாரடைப்பால் மரணமடைந்தார். இவரது மூத்த …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES