தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் தி.க. ராமசாமி மற்றும் மாநில பொதுச்செயலாளர் தோழர்.பிச்சைவேலு, பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்வில் மாநில துணைத்தலைவர்கள்
கே.எஸ்.மாரியப்பன், என்.வேலாயுதம். பா.சிவக்குமார், கோ.பழனியம்மாள், த.இராமகிருட்டிணன், ரா.நவநீதகிருஷ்ணன், க.ஆனந்தன், இல.விஜயராமலிங்கம்,மாநில செயலாளர்கள்
த.வினோத்ராஜா. வி.கே.ஏ.மனோகரன், சிவ.பழனி, உ.சிங்காரவேல், பி.விஜயன், கே.சந்திர போஸ், அ.சாம் டேனியல் தங்கராஜ் கீதாஸ்ரீ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கால அவகாசம் இன்றி, விடுமுறை நாட்களில் புள்ளி விவரங்கள் கோருவதையும், தினசரி காணொலி காட்சி ஆய்வு கூட்டம் நடத்துவதால் ஆய்வு அலுவலர்களின் ஆய்வுப்பணி, மற்றும் செயலாட்சியராக உள்ள சங்கங்களில் கடன் வழங்கல் பணிகளில் தொய்வு ஏற்படுவதை தடுத்திட வேண்டும்.
வாட்ஸாப் செயலி மூலம் அரசு அலுவலக கடிதப்போக்குவரத்து நடைபெறுவதும்,
நிர்வாகம் மேற்கொள்வதும் கைவிடப்பட வேண்டும்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பல் நோக்கு சேவை
மையங்களாக மாற்றும் திட்டத்தின் கீழ் கூட்டுறவு கொள்கைகளுக்கும் சங்கங்களின்
பிரதானமான நோக்கங்களுக்கும் முரணாக பதிவாளர் செயல்பட்டு கூட்டுறவு
நிறுவனங்களை செயலிழக்க செய்யும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதை
நிறுத்திட வேண்டும்.
1/10/2023 அன்று அறிவிக்க வேண்டிய துணைப்பதிவாளர் பதவி உயர்வு பட்டியல் நாளது தேதி வரை வெளியிடப்படாமல் உள்ளது, குளறுபடிக்கு இடமளிக்காமல் வெளிப்படை தன்மையுடன் உடன் பட்டியல் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கடந்த மே மாதம் (01.05.2023) கேட்க வேண்டிய முதுநிலை ஆய்வாளர். இளநிலை ஆய்வாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பதவி உயர்வு பட்டியல் 5 மாதம் கடந்தும் கேட்கப்படாமல் நிலுவையுள்ளது இது அனைத்துப்பணியாளர்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியையும் மனஉளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே உடன் அனைத்து நிலைகளிலும் பதவிஉயர்வு பட்டியல் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பால் கூட்டுறவு பணிக்கு துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் கூட்டுறவு துறை அலுவலர்களை தாய் துறைக்கு பணி மாற்றம் செய்ய வேண்டும், மேலும் அத்துறையில் ஐந்தாண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் பால் கூட்டுறவு தணிக்கை துறை இயக்குனர் மற்றும் மண்டல துணை இயக்குனர்களை பணி மாறுதல் செய்ய வேண்டும்.
மேற்படி கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப் படாததைக் கண்டித்து 18/10/2023 அன்று அனைத்து மாவட்ட இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
மேலும் இதே நிலை தொடர்ந்தால் பதிவாளர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தவது எனவும் முடிவு எடுக்கப்பட்டது. என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.