இந்திய சிலம்பம் அறக்கட்டளை மற்றும் வேல்டு ஸ்டார் புக் ஆஃப் ரெக்கார்டு இணைந்து உலக சாதனை முயற்சி
மதுரை,டிச.27-
இந்திய சிலம்பம் அறக்கட்டளை மற்றும் வேல்டு ஸ்டார் புக் ஆஃப் ரெக்கார்டு இணைந்து நடத்திய பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கண்களை கட்டிக்கொண்டு ஒரு மணி நேரம் இடைவிடாமல் தொடர்ந்து சிலம்பம் சுழற்றும் உலக சாதனை முயற்சி மதுரை எஸ்.எஸ்.காலனியில்
நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு இந்திய சிலம்பம் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் ரா.சரவணபாண்டி, ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் பிரபு ஆகியோர் தலைமை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக மக்கள் சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் ஜெயபாலன் மற்றும் சமூக சேவகர் பாலாஜி வானவில் பைன் ஆர்ட்ஸ் நிறுவனர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு உலக சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கி பாராட்டினார்கள்.
இதில் மக்கள் சட்ட உரிமைகள் கழகம் மாநில துணைத்தலைவர் சோலைமலை மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.