சபரிமலையில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பாக இந்த மண்டல மகரவிளக்கு காலங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க இயலாத சூழ்நிலையில் சபரிமலை சிறப்பு அதிகாரி (Special Officer) அவர்களின் வேண்டுகோளின் பேரில் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு மூலிகை குடிநீர், பிஸ்கட் வழங்கப்பட்டது.
நவம்பர் 29 முதல் டிசம்பர் 27 வரை 31 நாட்களில் ரூபாய் 8 இலட்சம் மதிப்பிலான பிஸ்கட்கள் சன்னிதானம் வரை காத்திருக்கும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
சன்னிதானம் அப்பாச்சிமேடு, புல்மேடு பாதையில் உடல்நலக்குறைவு ஏற்பட்ட பக்தர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல ஸ்டெச்சர் சர்வீஸ் சேவை வழங்கப்பட்டது.
இந்தாண்டு புல்மேடு பாதையில் அதிகளவிலான பக்தர்கள் வருகை புரிவதால் உரல்குழி தீர்த்தம் செல்லும் வழி அருகே முகாம் அமைக்கப்பட்டு ஸ்டெச்சர் சர்வீஸ் பிஸ்கட் மூலிகை குடிநீர் வழங்கப்பட்டது. 622 முறை ஸ்டெச்சர் சர்வீஸ் மேற்கொள்ளப்பட்டது
குறிப்பாக இச்சேவைகளில் மண்டல காலத்தில் மட்டும் 611 சேவா சங்க தொண்டர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தமிழ்நாடு தொண்டர்கள் மூலம் அழுதா.கரிமலை. பெரியானை வட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலும் அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.
வரும் மகரவிளக்கு காலத்தில் மூலிகை குடிநீர், பிஸ்கட் வழங்குதல்,ஸ்டெச்சர் சர்வீஸ் சேவை மேற்கொள்ள அதிக அளவிலான தொண்டர்களை ஈடுபடுத்த தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேற்படி சேவைகளை ஒருங்கிணைத்து செய்ய மத்திய தலைவர் ஐயப்பன், மத்திய பொதுச்செயலாளர் விஜயக்குமார், மத்திய பொருளாளர் விஸ்வநாதன் மற்றும் முகாம் அலுவலர்கள் தொண்டர் படை தளபதிகள் ராஜதுரை, ராமையா மற்றும் நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.