தென்னிந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் மதுரை மாவட்ட மாநாடு ஆரப்பாளையத்தில் உள்ள சிவபாக்யா திருமண மஹாலில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு மதுரை மாவட்ட தலைவர் வி.எஸ்.மாரிமறவன் மற்றும் மாவட்ட பொதுச்செயலாளர் ஒத்தக்கடை திருமுருகன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
மதுரை மாவட்ட செயல் தலைவர் பி.எம்.ராஜாமாறன், ஐ.டி விங் மாநில தலைவர் விஜயராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இம்மாநாட்டில் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமாறன் ஜி பேசியதாவது :-
இந்திய நாட்டின் மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி அவர்களே வருவார்கள் என கருத்து கணிப்பு சொல்கிறது. எனவே மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சி அமைய நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.
தமிழகத்தில் அறிவிக்கப்படாத எதிர்க்கட்சித் தலைவராக அண்ணாமலை அவர்கள் செயல்பட்டு வருகிறார். எனவே தமிழகத்தின் முதலமைச்சராக அண்ணாமலை அவர்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்.
எனவே பாஜக சார்பாக நிறுத்தப்படும் வேட்பாளர்களுக்கு நம் அனைவரும் பாடுபட்டு பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கு நாம் அனைவரும் அயராது உழைக்க வேண்டும் என பேசினார்.
இந்நிகழ்வில் மதுரை மாவட்ட நிர்வாகிகள் மகளிரணி, இளைஞரணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.