தமிழகத் திரைப்பட துணை நடிகர், நடிகைகள் & திரைப்பட உதவியாளர்கள் நலச்சங்கம் சார்பாக பொங்கல் விழா மதுரையில் சிறப்பாக நடைபெற்றது
மதுரை,ஜனவரி,13-
தமிழகத் திரைப்பட துணை நடிகர், நடிகைகள் & திரைப்பட உதவியாளர்கள் நலச்சங்கம் சார்பாக மதுரை ஆழ்வார்புரத்தில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது.
பின்னர் சங்க உறுப்பினர்களுக்கு புத்தாடைகள் மற்றும் பச்சரிசி,வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.
இவ்விழாவிற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் அய்யப்பன் தலைமை வகித்தார். செயலாளர் சரவணகுமார் மற்றும் பொருளாளர் திரைப்பட இயக்குனர் கொக்கி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் சங்கத்தின் மாநில தலைவர் பன்னீர்செல்வம், மகளிரணி மாநில ஒருங்கிணைப்பாளர் பேச்சி, கவுரவ ஆலோசகர் செல்வம், தென் மாவட்ட பொறுப்பாளர் நாகா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக அதிமுக நிர்வாகி டாக்டர் வி.பி.ஆர் செல்வகுமார், சங்கீதா கேட்டரிங் உரிமையாளர் ஜெகன், மருது திரைப்பட புகழ் நடிகை பொன்னுத்தாயி, கொளத்தூரான் திரைப்பட இயக்குனர் கலைச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதில் பெருந்தலைவர் நடிகர் திலகம் அறக்கட்டளை நிர்வாகிகள் முத்துக்குமார், போஸ், மீர்பாஷா, பாலாஜி மற்றும் சங்கத்தின் செயலாளர் வள்ளி, மாநில செயற்குழு உறுப்பினர் வளர்மதி மற்றும் டாக்டர் மலர்விழி, டாக்டர் சின்னச்சாமி, பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.