மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம், கரிசல்பட்டியில் உள்ள அகத்தியர் அன்னதான அறக்கட்டளை அலுவலகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பச்சரிசி, வெல்லம்,கரும்பு உள்ளிட்ட பொங்கல் தொகுப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா டிரஸ்ட் நிறுவனத் தலைவர் பா.முத்துப்பாண்டி தலைமையிலும், பில்டிங் காண்ட்ராக்டர் பூமிநாதன் ஏற்பாட்டிலும் நடைபெற்றது.
டிரஸ்ட் செயலாளர் திருமதி. மு.சகுந்தலாதேவி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பொருளாளர் மு.சக்திவேல் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக அன்னாள் நல காப்பகம் ஒருங்கிணைப்பாளர் யோகராஜ் பங்கேற்றார்.
இதில் டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர்கள் திருமதி பாக்கியலெட்சுமி, கவிதா,நாகஜோதி, சக்கரை, கோமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் துணைத்தலைவர் மாலா நன்றி கூறினார்.