பரவையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 107-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
மதுரை, ஜனவரி.21-
மதுரை மாவட்டம் பரவையில் மேற்கு தொகுதி அதிமுக சார்பாக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 107-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் பரவை பேரூர் கழகச் செயலாளர் சி.ராஜா மற்றும் பரவை பேரூராட்சி சேர்மன் கலாமீனா ராஜா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர், மாநகர் மாவட்ட கழகச் செயலாளர் செல்லூர் கே .ராஜூ எம்எல்ஏ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் வில்லாபுரம் ராஜா, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மாவட்ட பொருளாளர் பா.குமார், மருத்துவ அணி மாநில இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் வி.பி.ஆர் செல்வகுமார், எம்.எஸ்.கே மல்லன், சக்திவிநாயகர் பாண்டியன், ஆர்.கே.ரமேஷ், எம்.ஜி.ராமச்சந்திரன், மார்க்கெட் மார்நாடு, விளாங்குடி முத்துமுருகன், பாவலர் ராமச்சந்திரன்,நிரஞ்சன், மாஸ்.மணி, மலர்விழி, சின்னச்சாமி உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.