தி இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் சார்பாக கட்டிட என்ஜினீயர்களுக்கான ஐ.சி.பி. எல். சீசன் 2 கிரிக்கெட் போட்டி 2-வது நாளாக மதுரா கல்லூரியில் நடைபெற்றது.
இதில் மதுரை, திண்டுக்கல், காரைக்குடி மற்றும் நத்தம் அணிகள் பங்கேற்றன. இப்போட்டியை இந்தியா சிமெண்ட்ஸ் விற்பனை அதிகாரிகள் ஜஸ்டின், முத்துப்பாண்டி, சபரி, தவமுருகன் மற்றும் முத்துக்கண்ணன் ஆகியோர் ஒருங்கிணைந்தது நடத்தினர்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மதுரையின் NO.1 ஸ்டாக்கிஸ்ட் அண்ணாநகர் ரமேஷ் ஏஜென்ஸி உரிமையாளர் ரமேஷ் வெற்றி பெற்ற மதுரை அணி வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
அவருக்கு இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் இனியவன், மதுசூதனன் மற்றும் வருண் ஆகியோர் நினைவு பரிசை வழங்கி கௌரவித்தனர்.