Wednesday , October 16 2024
Breaking News
Home / செய்திகள் / தமிழ்நாட்டில் இருந்து லண்டன் சென்று அதிக ஞாபகத் திறன் மூலம் சோழன் உலக சாதனை படைத்த 8 வயது மாணவி ஸ்ரீ வித்யா

தமிழ்நாட்டில் இருந்து லண்டன் சென்று அதிக ஞாபகத் திறன் மூலம் சோழன் உலக சாதனை படைத்த 8 வயது மாணவி ஸ்ரீ வித்யா

தமிழ்நாட்டில் இருந்து லண்டன் சென்று அதிக ஞாபகத் திறன் மூலம் சோழன் உலக சாதனை படைத்த 8 வயது மாணவி ஸ்ரீ வித்யாவுக்கு ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

லண்டனில் வசித்து வரும் ராஜகோபால் மற்றும் லக்ஷ்மி தம்பதியரின் மகள் ஸ்ரீ வித்யா 3 நிமிடங்கள் மற்றும் 26 நொடிகளில் 150 உலக நாடுகளுடைய கொடிகளை அந் நாட்டின் பெயர்களைக் கூறி அடையாளம் காட்டிய அதேவேளை அந் நாடுகளுடைய தேசிய மொழிகளின் பெயர்களையும் ஒப்புவித்து சோழன் உலக சாதனை படைத்தார்.

சோழன் உலக சாதனை படைக்கும் முயற்சியை‌ தமிழ்நாட்டின் மதுரையில் இருந்து காணொளிக் காட்சியூடாக கண்காணித்து உறுதி செய்தார் அந் நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன் அவர்கள்.

அதேவேளை, இந்த சோழன் உலக சாதனை நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தினார் சோழன் நிறுவனத்தின் லண்டன் நாட்டிற்கான கிளையின் தலைவர் திருமதி. புஷ்பகலா வினோத்குமார். இந்த நிகழ்வில் குடிவரவு திணைக்கள மூத்த வழக்கறிஞரும் பெல்தம் தமிழ் சங்கத்தின் தலைவருமான பத்ரிநாத் பாலவெங்கடேசன்,
பெல்தம் தமிழ் சங்கத்தின் நிர்வாக அறங்காவலர் வினோத்குமார்,
பெல்தம் தமிழ் சங்கத்தின் செயலாளர் ரங்கநாதன் ரகோத்தமன் மற்றும் பெல்தம் தமிழ் சங்கத்தின் துணைச் செயலாளர் பிரபாகரன் போன்றோர் பங்கேற்று சோழன் உலக சாதனை படைத்த சிறுமியை பலரும் வாழ்த்திப் பாராட்டினார்கள்.

உலக சாதனை படைத்த ஸ்ரீவித்யாவுக்கு நண்பர்கள் உறவினர்கள் என ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமியை, முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரி எம்.சம்பத் சந்தித்து பேசினார்

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி அவர்களை மதுரை அண்ணாநகரில் அவரது அலுவலகத்தில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES