பெண்களால் நடத்தப்பட்டு வரும் திருமங்கலம் அன்னை வசந்தா டிரஸ்ட் சிலம்பு பயிற்சி பள்ளி மாணவிகளுக்கும் டிரஸ்ட் தலைவர் அமுதவள்ளிக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
ராஜபாளையம், மார்ச்.28
ராஜபாளையத்தில் கிரகாம்பெல் உலக சாதனை புத்தகம் நிறுவனம் மற்றும் வீரத்தமிழர் தற்காப்புக் கலை சங்கம் இணைந்து நடத்திய உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் ராஜபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அன்னை வசந்தா டிரஸ்ட் சார்பாக நடத்தப்படும்,அகத்தியர் சிலம்பம் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வரும் மாணவிகள் அம்சவள்ளி,சமிக்சா,சுவாதிகா, மீனாட்சி,பிரதியுஷா,காவாயா,ஸ்ரீபாவனா,ஸ்ரீபார்கவி,விஜய்தர்ஷினி, லிங்கேஷ்,பவதாரிணி ஆகியோர் கலந்து கொண்டு இடைவிடாது சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர்.
உலக சாதனை படைத்த மாணவிகளுக்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்க தலைமை ஆசான் மருதுபாண்டியன் பெற்றுக்கொண்டார்.
பெண்களால் மட்டுமே நடத்தப்படும் இந்த டிரஸ்ட் தலைவர் அமுதவள்ளி மற்றும் நிர்வாகிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.