Saturday , October 12 2024
Breaking News
Home / செய்திகள் / SBI வாடிக்கையாளர்களுக்கு ஆபத்து.. இந்த தப்பை மட்டும் செஞ்சுடாதீங்க.. வங்கி நேரடி எச்சரிக்கை.. என்ன விஷயம்?

SBI வாடிக்கையாளர்களுக்கு ஆபத்து.. இந்த தப்பை மட்டும் செஞ்சுடாதீங்க.. வங்கி நேரடி எச்சரிக்கை.. என்ன விஷயம்?

SBI வாடிக்கையாளர்களுக்கு ஆபத்து.. இந்த தப்பை மட்டும் செஞ்சுடாதீங்க.. வங்கி நேரடி எச்சரிக்கை.. என்ன விஷயம்?

எஸ்பிஐ (SBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank Of India) தற்போது அதன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு (SBI bank customers) ஒரு முக்கியமான எச்சரிக்கை செய்தியை (Warning message) வெளியிட்டுள்ளது.

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் (SMS) மூலம் நிகழக்கூடிய மோசமான மோசடி ஆபத்து குறித்து, பாரத ஸ்டேட் வங்கி தற்போது எச்சரித்துள்ளது. இந்த மோசடியில் வாடிக்கையாளர்கள் தெரியாமல் கூட சிக்கிட வேண்டாம் என்றும், அதேபோல், இதுபோன்ற மோசடிகளில் SBI வாடிக்கையாளர்கள் சிக்காமல் தப்பிக்க என்ன செய்ய வேண்டுமென்ற தகவலையும் வங்கி தற்போது வெளியிட்டுள்ளது.

அசால்ட்டாக 50 கோடிக்கும் மேலான வாடிக்கையாளர்களை கையாண்டு வரும் எஸ்பிஐ (SBI) வங்கி தற்போது அதன் அணைத்து வகையான வங்கி கணக்கு (Sbi bank accounts) வாடிக்கையாளர்களுக்கும் ஒரு புதிய எச்சரிக்கை செய்தியை (SBI warning message to customers) வெளியிட்டுள்ளது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கம் (Sbi X Page) வழியாக ஒரு முக்கியமான தகவலை அதன் வங்கி வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்துள்ளது.

SBI வாடிக்கையாளர்களுக்கு ஆபத்து.. வங்கியே நேரடியாக வெளியிட்ட எச்சரிக்கை செய்தி:

SBI வங்கி வாடிக்கையாளர்களின் KYC அப்டேட் (SBI KYC Update) மற்றும் ரிடீம் ரிவர்ட் (SBI Reward Redeem) போன்ற போலியான எஸ்எம்எஸ் மூலம் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். மோசடிக்காரர்களின் புதிய மோசடி முயற்சியாக, இத்தகைய மோசடிகள் இப்போது இந்தியா முழுக்க பரவி வருவதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களின் மொபைல் எண்ணிற்கு (mobile number) நேரடியாக ஒரு போலி SMS மெசேஜ் அனுப்பப்படுகிறது.

அதில் உங்கள் KYC அப்டேட்டை இன்றே உடனே செய்து முடிக்காவிட்டால் உங்கள் அக்கௌன்ட்டின் சேவை முடக்கப்படும் என்று அந்த எஸ்எம்எஸ் செய்தியில் (SMS message) குறிப்பிடப்பட்டுள்ளது. உடனே உங்கள் KYC தகவலை இலவசமாக அப்டேட் (Free KYC update) செய்ய இந்த லிங்க் ஐ கிளிக் செய்யவும் (clik this link) என்று ஒரு போலி இணையதள லிங்க்கையும் அந்த எஸ்எம்எஸ் உடன் மோசடிக்காரர்கள் இணைத்து அனுப்புகிறார்கள்.

இதேபோல், கிரிக்கெட் ரிவார்டு (Cricket reward) என்ற பெயரில் உங்கள் SBI வங்கி கணக்கிற்கு ரூ. 4,999 ரிவார்டு பாயிண்ட்களாக (reward points) வழங்கப்பட்டுள்ளது. உடனே இவற்றை ரொக்கமாக மாற்ற, இந்த லிங்கை கிளிக் செய்யவும் என்று போலியான மோசடி லிங்க்குடன் மற்றொரு எஸ்எம்எஸ் செய்தி, SBI வங்கி வாடிக்கையாளர்களிடம் பகிரப்பட்டு வருகிறது. மொபைல் போனிற்கு வரக்கூடிய எஸ்எம்எஸ்கள் பார்ப்பதற்கு அதிகாரப்பூர்வமாக இருப்பது போல தெரிந்தாலும், அவை போலியானதாக இருக்கிறது.

போலி SMS மற்றும் SBI வங்கியின் அசல் மெசேஜ்களை எப்படி அடையாளம் காண்பது?

இந்த மெசேஜ்களில் வரும் போலியான லிங்க்களை கிளிக் செய்வதன் மூலம், வாடிக்கையாளர்கள் அவர்களின் வங்கி கணக்கையும் அதில் உள்ள பணத்தை மொத்தமாக இழக்கக்கூட வாய்ப்புள்ளது என்று SBI வங்கி எச்சரித்துள்ளது. போலியான SBI மெசேஜ் (Fake SBI bank SMS messages) மற்றும் அசல் வங்கியின் SMS மெசேஜ்களை எப்படி அடையாளம் காண்பது? SBI அல்லது SB என்ற குறுகிய அடையாளங்களுடன் வரும் SMS மட்டுமே அதிகாரப்பூர்வ வங்கி மெசேஜ்களாகும்.

அதேபோல், வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கங்கள் எப்போதும் “.sbi” என்ற அடையாளங்களுடன் நிறைவு பெரும். உதாரணமாக, “https://bank.sbi அல்லது http//onlinesbi.sbi” என்று குறிப்பிடப்படும். அதேபோல், HTTP மற்றும் பேட் லாக் (Pad lock) விபரங்களை கண்காணிக்க மறக்காதீர்கள். ஒருவேளை நீங்கள் ஏமாற்றப்பட்டாலோ அல்லது சைபர் கிரைம் பற்றி புகார் அளிக்க விரும்பினாலோ உடனே “1930” என்ற உதவி எண்ணிற்கு (helpline) அழைப்பு கொடுக்கவும். அல்லது https//cybercime.gov.in மூலம் புகார் அளிக்கலாம்.

அடையலாம் தெரியாத எண்ணில் இருந்து பரிசு தொகை என்ற பெயரில் அல்லது கிரிக்கெட் ரிவார்டு என்ற பெயரிலோ எஸ்எம்எஸ் வந்தால், அதனுடன் இருக்கும் லிங்கை மட்டும் கிளிக் செய்துவிட வேண்டாம் எண்று SBI வாடிக்கையாளர்களை வங்கி எச்சரித்துள்ளது.

Bala Trust

About Admin

Check Also

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமியை, முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரி எம்.சம்பத் சந்தித்து பேசினார்

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி அவர்களை மதுரை அண்ணாநகரில் அவரது அலுவலகத்தில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES