Thursday , September 12 2024
Breaking News
Home / செய்திகள் / “இந்தியா அல்லது சீனா..” உலகிலேயே அதிக மக்கள்தொகையை கொண்ட நாடு எது! மக்கள் தொகை சரிவதால் என்ன பிரச்னை

“இந்தியா அல்லது சீனா..” உலகிலேயே அதிக மக்கள்தொகையை கொண்ட நாடு எது! மக்கள் தொகை சரிவதால் என்ன பிரச்னை

"இந்தியா அல்லது சீனா.." உலகிலேயே அதிக மக்கள்தொகையை கொண்ட நாடு எது! மக்கள் தொகை சரிவதால் என்ன பிரச்னை

டெல்லி: இன்றைய தினம் உலக மக்கள்தொகை தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகள் என்றால் அது இந்தியாவும் சீனாவும் தான்.

அதேநேரம் இந்த இரு நாடுகளில் எந்த நாட்டின் மக்கள் தொகை டாப்.. அதன் தற்போதைய மக்கள் தொகை என்ன.. வரும் காலத்தில் அது குறையுமா அல்லது அதிகரிக்குமா என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

கடந்த ஓரிரு நூற்றாண்டுகளாகவே உலக மக்கள் தொகை படுவேகமாக அதிகரித்து வந்தது. மருத்துவ வசதிகள் மேம்பட்டது, அடிப்படை சுகாதாரத்தைப் பொதுமக்கள் கடைப்பிடிக்கத் தொடங்கியது ஆகியவை இதற்குக் காரணமாகும்..

உலக மக்கள் தொகை 100 கோடியை எட்ட குறைந்தபட்சம் சில ஆயிரம் நூற்றாண்டுகள் ஆகும் என்றே 19ம் நூற்றாண்டில் முதலில் பலரும் கருதினர். ஆனால், வெறும் 200 ஆண்டுகளுக்குள், மக்கள் தொகை அதைவிட ஏழு மடங்கு அதிகரித்து உள்ளது.

உலக மக்கள்தொகை: கடந்த 2011ஆம் ஆண்டில், உலக மக்கள்தொகை 700 கோடியை எட்டியது. வரும் 2030ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை சுமார் 850 கோடியைத் தொடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 2050 ஆம் ஆண்டில் இது 970 கோடியையும் 2100இல் 1000 கோடியையும் இது தொடும் என்றே ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் கணித்துள்ளன.

மருத்துவச் சிகிச்சையால் ஆயுட்காலம் அதிகரித்துள்ளது, கருவுறுதல் விகிதங்களில் ஏற்படும் மாற்றங்கள், நகரமயமாக்கல் மற்றும் இடம்பெயர்வு, பொருளாதார மேம்பாடு, வேலைவாய்ப்பு, வருமானப் பகிர்வு, வறுமை மற்றும் சமூக நலன் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

இந்தியா அல்லது சீனா: இதில் 142.86 கோடி மக்களைக் கொண்டு உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாகச் சீனாவே உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருந்து வந்தது. ஆனால், சமீபத்தில் தான் சீனாவை ஓவர்டேக் செய்து இந்தியா அதிக மக்கள்தொகை கொண்ட நாடு என்ற சாதனையைப் படைத்தது. சீனாவில் பிறப்பு விகிதம் குறைவது, உயிரிழப்புகள் அதிகரிப்பது, அரிசின் பாசிலி உள்ளிட்ட பல்வேறு காரணங்களாலேயே சீனாவில் மக்கள்தொகை தொடர்ந்து குறைந்து வருகிறது.

இரட்டிப்பாகும்: இந்தியாவின் மக்கள்தொகை தற்போதைய விகிதத்தில், அதாவது ஆண்டுக்கு ஒரு சதவிகிதம் என்று தொடர்ந்தாலே, அடுத்த 75 ஆண்டுகளில் அதன் மக்கள்தொகை இரட்டிப்பாகிடும் என்கிறது சர்வதேச அமைப்புகள்.. தற்போதைய மதிப்பில் இருந்து இரட்டிப்பாகும். அதேநேரம் 2050ம் ஆண்டிற்குப் பிறகு நாட்டின் மக்கள்தொகை குறையத் தொடங்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. அதேபோல உலக மக்கள்தொகையும் மெல்லக் குறைய ஆரம்பிக்கும் என்றே கூறப்பட்டுள்ளது.

ஏன் முக்கியம்: மக்கள்தொகை வளர்ச்சியை எந்தளவுக்கு முக்கியமானது என்பதை உணர்த்தும் வகையில் ஐநா முன்னெடுப்பின்படி 1987ஆம் ஆண்டு முதல் ஜூலை 11ஆம் தேதியை உலக மக்கள்தொகை தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்தாலும் ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளில் மக்கள் சரிவடைந்து வருகிறது.

பொதுமக்கள் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள விரும்பாத நிலையில், வேலை செய்யும் வயதில் உள்ள இளைஞர்கள் மக்கள் தொகை குறைகிறது. அதேநேரம் முதியவர்களின் மக்கள் தொகை அதிகரிக்கிறது. இது அந்நாட்டின் பொருளாதாரத்தையே பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.

Bala Trust

About Admin

Check Also

தந்தையை இழந்த கல்லூரி மாணவனுக்கு ஒரு லட்சம் நிதியுதவி வழங்கிய சிங்கப்பூர் குரு சித்தம் பெருங்குடில் அமைப்பின் நிறுவனர்…!

சிவகங்கை மேலமங்கத்தில் வசித்து வரும் கனரக ஊர்தி ஓட்டுநரான ஜோர்ஜ் டோமினிக்(49)அவர்கள் கடந்த மாதம் மாரடைப்பால் மரணமடைந்தார். இவரது மூத்த …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES