Sunday , October 13 2024
Breaking News
Home / செய்திகள் / ஏர்டெல் விஸ்வரூபம்.. இனி மாதாந்திரம் ரூ.167 போதும்.. 1 வருட வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்கள்.. டேட்டா சலுகை!

ஏர்டெல் விஸ்வரூபம்.. இனி மாதாந்திரம் ரூ.167 போதும்.. 1 வருட வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்கள்.. டேட்டா சலுகை!

ஏர்டெல் விஸ்வரூபம்.. இனி மாதாந்திரம் ரூ.167 போதும்.. 1 வருட வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்கள்.. டேட்டா சலுகை!

ஏர்டெல் கஸ்டமர்களில் சிம் ஆக்டிவ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகையை மட்டும் எதிர்பார்க்கும் நபர்களுக்கு மாதத்துக்கு வெறும் ரூ.167 செலவில் 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் ப்ரீபெய்ட் திட்டம் களமிறங்கி இருக்கிறது.

அதேபோல 28 நாட்கள், 30 நாட்கள், 77 நாட்கள், 84 நாட்கள் என்று மலிவான விலைக்கு வாய்ஸ் கால்கள் திட்டங்கள் வருகின்றன. முற்றிலும் டேட்டாவே கிடையாது என்றும் சொல்ல முடியாது, தேவைக்கேற்ப டேட்டா சலுகையும் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டங்கள் குறித்த விவரம் இதோ.

ஏர்டெல் ரூ 199 திட்ட விவரங்கள் (Airtel Rs 199 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டமானது, அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகை கொண்ட பேசிக் திட்டமாகும். இந்த திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த வேலிடிட்டி நாட்களில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம்.

இதுபோக நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையையும் பெற்று கொள்ளலாம். டேட்டா சலுகையை பார்க்கையில், 28 நாட்களுக்கும் சேர்த்து 2 ஜிபி லம்ப்-சம் டேட்டா கிடைக்கிறது. இந்த டேட்டாவுக்கு பிறகு 1 எம்பிக்கு 50 பைசா கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும், விங்க் மியூசிக், ஹலோ டியூன்ஸ் சலுகைகள் வருகின்றன. நாளுக்கு ரூ.7 செலவில் இந்த திட்டம் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ 219 திட்ட விவரங்கள் (Airtel Rs 219 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். 300 எஸ்எம்எஸ் சலுகை மற்றும் 3 ஜிபி லம்ப்-சம் டேட்டா சலுகை கிடைக்கிறது. இதுபோக ரூ.5 மதிப்பில் டாக்டைம் மற்றும் விங்க் மியூசிக், ஹலோ டியூன்ஸ் சலுகை வருகிறது.

ஏர்டெல் ரூ 489 திட்ட விவரங்கள் (Airtel Rs 489 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 77 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களின் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 600 எஸ்எம்எஸ் சலுகைகள் வருகிறது. அதேபோல 6 ஜிபி லம்ப்-சம் டேட்டா சலுகை கிடைக்கிறது. மேலும், அப்பல்லோ 24/7 சர்கிள் சந்தா, விங்க் மியூசிக், ஹலோ டியூன்ஸ் சலுகை கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ 509 திட்ட விவரங்கள் (Airtel Rs 509 Plan Details): இந்த திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டியை பெற்று கொள்ளலாம். இந்த நாட்களில் முந்தைய திட்டங்களை போலவே அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை வருகிறது. ஆனால், இந்த திட்டத்தில் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம்.

இதுபோக 6 ஜிபி லம்ப்-சம் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. அதேபோல மூன்று மாதங்களுக்கான அப்பல்லோ 24/7 சர்கிள் சந்தா, விங்க் மியூசிக், ஹலோ டியூன்ஸ் சலுகை வருகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 6 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 1 எம்பிக்கு 50 பைசா கட்டணமாக செலுத்த வேண்டும். மாதத்துக்கு ரூ.170 செலவில் இந்த திட்டம் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ 1999 திட்ட விவரங்கள் (Airtel Rs 1999 Plan Details): இந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டத்தில் இல்லாத சலுகைகளே கிடையாது. டேட்டாவை தவிர மற்ற சலுகைகள் வாரி வழங்கப்பட்டுள்ளன. அதாவது, 365 நாட்களுக்கும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் சலுகை கிடைக்கிறது. அதேபோல சிம் ஆக்டிவாக இருக்கும்.

இதுபோக நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் வீதம் கஸ்டமர்கள் அனுப்பி கொள்ளலாம். மொத்தமாக 24 ஜிபி லம்ப்-சம் டேட்டா சலுகை கிடைக்கிறது. முந்தைய திட்டங்களை போலவே ப்ரீ போஸ்ட் டேட்டா சலுகை இதிலும் கிடையாது. அப்பல்லோ 24/7 சர்கிள் சந்தா, விங்க் மியூசிக், ஹலோ டியூன்ஸ் சலுகை வருகிறது. மாதத்துக்கு ரூ.167 செலவில் கிடைக்கிறது.

Bala Trust

About Admin

Check Also

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமியை, முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரி எம்.சம்பத் சந்தித்து பேசினார்

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி அவர்களை மதுரை அண்ணாநகரில் அவரது அலுவலகத்தில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES