Monday , October 14 2024
Breaking News
Home / செய்திகள் / இனி ஆன்லைன் வாயிலாக கட்டட அனுமதி பெறலாம்.! முழு விவரம் இதோ..

இனி ஆன்லைன் வாயிலாக கட்டட அனுமதி பெறலாம்.! முழு விவரம் இதோ..

இனி ஆன்லைன் வாயிலாக கட்டட அனுமதி பெறலாம்.! முழு விவரம் இதோ..

கட்டட சான்றிதழ் : தமிழகம் முழுவதும் நடுத்தர மக்களின் வீடு கட்டும் கனவை எளிதாக்க உதவும் வகையில் கட்டட அனுமதியை ஆன் லைன் மூலம் உடனடியாக வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்த கையோடு, 10 பயனாளிகளுக்கு கட்டுமான அனுமதி ஆணைகளை வழங்கினார்.

2024-2025-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், சுயசான்றிதழ் மூலமாகப் பொதுமக்கள் கட்டட அனுமதி பெறுவதற்குப் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, நடுத்தர மக்களின் வீடு கட்டும் கனவை எளிதாக்கும் வகையில், இன்று முதல் தமிழகத்தில் இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

திட்டத்தின் சிறப்பு அம்சங்கள் :

  • இத்திட்டத்தின் படி https://onlineppa.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
  • ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர் அளிக்கும் விவரத்தின் அடிப்படையில் உடனடியாக அனுமதி வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட எந்த அலுவலகத்துக்கும் செல்ல வேண்டியதில்லை.

கட்டடப் பணி நிறைவடைந்ததும் முடிவுச் சான்றும் பெற வேண்டியதில்லை. உடனடியாக அனுமதி பெற WWw.onlineppa.tn.gov.in இணையதளம் மூலம் கட்டட அனுமதி பெற விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பங்களுக்கு பரிசீலனை, உட்கட்டமைப்பு கட்டணங்களில் இருந்து 100% விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பற்றி கீழ் காணலாம்.

மேலும், இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு

  1. https://onlineppa.tn.gov.in/user-manual-for-panchayat
  2. சுயசான்றிதழ் – pdf

எவ்வாறு கட்டட அனுமதி வளப்படுகிறது?

2,500 சதுர அடி வரையுள்ள மனையி த்தில், 3,500 சதுர அடி கட்டடப் பரப்பளவிற்குள் தரைத்தளம் அல்லது தரைத்தளம் மற்றும் முதல் தளம் கொண்ட 7 மீட்டர் உயரத்திற்குட்பட்டு குடியிருப்புக் கட்டடத்தைக் கட்டுவதற்கு விரும்பும் பொதுமக்கள் சுயசான்றிதழ் திட்டத்தின் கீழ், கட்டட அனுமதியை எளிதாகவும் உடனடியாகவும் பெற முடியும்.

சுயசான்றிதழ் திட்டம் :

சுயசான்றிதழ் திட்டம் என்பது பொதுமக்கள் கட்டட அனுமதிக்காக அலுவலகங்களுக்குச் சென்றுவரும் நேரத்தை முழுமையாக தவிர்த்து அதிகபட்ச வெளிப்படைத் தன்மையுடனும், நடைமுறையில் உள்ள கட்டட விதிகளை எளிமைப்படுத்தியும் மக்கள் மேற்கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சியாகும்.

கடைப்பிடிப்பதற்கு தற்போதுள்ள ஒற்றைச் சாளர முறையின் மூலம் ஒப்புதல் பெறுவதைக் காட்டிலும், இந்தச் சுயசான்றிதழ் திட்டத்தில் ஒப்புதல் பெறும் நடைமுறை மிகவும் எளிதான வகையில் அமைந்து பொதுமக்களுக்குப் பெரிதும் பயனளிக்கும். இது தொடர்பாக, ஒற்றைச் சாளர முறையில் சுயசான்றிதழ் திட்டத்திற்கான மென்பொருள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் எவ்வாறு பெறப்படுகிறது?

குடியிருப்புக் கட்டடங்களுக்கான கட்டட அனுமதி பெறுவதற்காகப் பெறப்படும் மொத்த விண்ணப்பங்களில் 72 விழுக்காடு ஊராட்சிகளிடமிருந்தும், 77 விழுக்காடு பேரூராட்சிகளிடமிருந்தும், 79 விழுக்காடு நகராட்சி மற்றும் மாநகராட்சிகளிடமிருந்தும் பெறப்படுகிறது.

பரிசீலனை மற்றும் தளர்வு :

அவ்விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளால் ஒற்றைச் சாளர முறையில் பரிசீலனை செய்யப்படுகின்றன. பொதுமக்கள் பயன்பெறும் வகையில், இப்புதிய திட்டத்தின் கீழ் அனுமதி பெறும் கட்டடங்களுக்கும் சாலைக்கும் இடையில், தளர்வு (1.5 மீட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது). கூராய்வுக்கட்டணம் (scrutiny fee) (சதுர மீட்டருக்கு ரூ.2), உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளுக்கான (I & A) கட்டணங்கள் (சதுர மீட்டருக்கு ரூ.375) ஆகியவற்றில் விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் தேவையான கட்டணங்களைச் செலுத்தியபின் விரைவுத் துலங்கல்(QR) குறியீட்டுடன் கட்டட அனுமதி மற்றும் வரைபடங்களை உடனடியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், முன் இடக்கௗ ஆய்வு மேற்கொள்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, உடனடியாகக் கட்டுமானப் பணி மேற்கொள்வதற்கும் வழிவகை செய்து கட்டட முடிவுச் சான்று பெறுவதிலிருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது.

Bala Trust

About Admin

Check Also

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமியை, முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரி எம்.சம்பத் சந்தித்து பேசினார்

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி அவர்களை மதுரை அண்ணாநகரில் அவரது அலுவலகத்தில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES