Monday , October 14 2024
Breaking News
Home / செய்திகள் / எட்டு எட்டா தமிழகத்தை பிரிச்சிக்கோ.. எந்த எட்டில் இப்ப இருக்க தெரிஞ்கோ!

எட்டு எட்டா தமிழகத்தை பிரிச்சிக்கோ.. எந்த எட்டில் இப்ப இருக்க தெரிஞ்கோ!


எட்டு எட்டா தமிழகத்தை பிரிச்சிக்கோ.. எந்த எட்டில் இப்ப இருக்க தெரிஞ்கோ!

சென்னை: தமிழகத்தில் பொது பேருந்து போக்குவரத்தை நடைமுறைப்படுத்துவதற்காக மாநிலம் 8 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது.
நோய் கட்டுப்பாடு பகுதிகளில் இந்தியா முழுவதும் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புதிய வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டிருந்தது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் ஊரடங்கிற்கான புதிய வழிகாட்டும் நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி மாநிலத்தில் பொது பேருந்து போக்குவரத்தை ஜூன் 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாநிலம் கீழ்கண்ட 8 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது.
போக்குவரத்திற்காக தமிழகத்தை எட்டு எட்டாக பிரித்த அரசு.


மண்டலம் 1- கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல்
மண்டலம் 2- தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி
மண்டலம் 3- விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி
மண்டலம் 4- நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை
மண்டலம் 5- திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம்
மண்டலம் 6- தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி
மண்டலம் 7- காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு
மண்டலம் 8- சென்னை காவல் எல்லைக்குள்பட்ட பகுதி


மண்டலம் 7-இல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னைகாவல் எல்லைக்குள்பட்ட பகுதிகள் தவிர்த்து அனைத்து மண்டலங்களுக்குள் 50 சதவீத பேருந்துகள் மட்டும் இயக்கப்படும்.
மண்டலம் 7, மண்டலம் 8-க்கு உட்பட்ட பகுதிகளில் பொது போக்குவரத்து பேருந்துகளின் இயக்கத்திற்கு தடை தொடர்கிறது. அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பேருந்துகளும் இயக்க அனுமதிக்கப்படுகிறது.

பேருந்துகளில் உள்ள மொத்த இருக்கைகளில் 60 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கபபடும்.

தமிழகத்தில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. 50 சதவீத பேருந்துகள் இயக்கம்.. அரசு அறிவிப்பு
மண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ பாஸ் தேவையில்லை என்ற நிலையில் பொது போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கவும் இ பாஸ் அவசியமில்லை.
அனுமதிக்கப்பட்ட இனங்களுக்கு தவிர, மண்டலங்களுக்கு இடையேயும் மாநிலங்களுக்கிடையேயுமான பேருந்து போக்குவரத்து சேவைகளுக்கான தடை தொடர்கிறது.
அரசால் தனியாக வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி பொது போக்குவரத்திற்கான பேருந்துகள் இயக்கப்படும்.
இ பாஸ் முறை
அனைத்து வகையான வாகனங்களும் மேற்கண்ட அட்டவணையில் உள்ள மண்டலத்திற்குள் இயங்க அனுமதிக்கப்படுகிறது. அவைகளுக்கு இ பாஸ் தேவையில்லை.
வெளிமாநிலங்களுக்கு சென்று வரவும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வரவும் மண்டலங்களுக்கிடையே சென்று வரவும் இ பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

Bala Trust

About Admin

Check Also

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமியை, முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரி எம்.சம்பத் சந்தித்து பேசினார்

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி அவர்களை மதுரை அண்ணாநகரில் அவரது அலுவலகத்தில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES