Thursday , November 7 2024
Breaking News
Home / செய்திகள் / தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர் சங்கம் (டாக்பியா) சார்பாக பெருந்திரள் முறையீடு, ஆர்ப்பாட்டம் மற்றும் தொடர் போராட்டம்…

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர் சங்கம் (டாக்பியா) சார்பாக பெருந்திரள் முறையீடு, ஆர்ப்பாட்டம் மற்றும் தொடர் போராட்டம்…

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர் சங்கம் (டாக்பியா) சார்பில் பெருந்திரள் முறையீடு, ஆர்ப்பாட்டம் மற்றும் தொடர் போராட்டம்.

   
மதுரை & தேனி மாவட்ட தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைததுப் பணியாளர் சங்கம் (டாக்பியா) சார்பில் மதுரை மீனாட்சி பஜார் அருகில் உள்ள மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வஙகி தலைமை அலுவலகம் முன்பு மதுரை மாவட்ட கௌரவ செயலாளர் ஆ.ம.ஆசிரிய தேவன் தலைமையிலும்,மதுரை மாவட்ட கௌரவ தலைவர் ராஜா,மாநில பொதுச் செயலாளர் காமராஜ் பாண்டியன் முன்னிலையில் , 2021 விவசாய கடன் தள்ளுபடி தொகை அரசிடம் இருந்து வந்துள்ளதை நீண்ட நாட்களாக சங்கங்களுக்கு வழங்காமல் உள்ளதை உடனே வழங்க வேண்டும், விவசாய கடன் மற்றும் மகளிர் குழு கடன் வழங்குவதில் தேவையில்லாமல் முட்டுக்கட்டை ஏற்படுத்தி காலந் தாழ்த்துவதை கை விட வேண்டும், 

தொடக்க நிலை சங்கங்கள் பெறும் கடன்களுக்கு கூடுதல் வட்டி வசூலிப்பதை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 18- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் சங்கங்களை நசுக்கும் மற்றும் பணியாளர்களை மிரட்டும் மதுரை மாவ‌ட்ட மததிய கூட்டுறவு வஙகி நிர்வாகத்தை கண்டித்தும்  வரும் 11,ஆம் தேதி காலை மாபெரும் பெருந்திரள் முறையீடு போராட்டமும் அடுத்து 18-ஆம் தேதி அதே அலுவலக வளாகம் உள்ளே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் தொடர்ந்து காலவரையற்ற வேலை நிறுத்தமும் நடைபெறவுள்ளது. 

இந்த தொடர் போராட்டத்தில் மதுரை மற்றும் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களின் ரேஷன் கடை பணியாளர்கள் தவிர்த்து அனைத்து பணியாளர்களும் கலந்து கொள்வார்கள் என தேனி மாவட்ட செயலாளர் காமராஜ் பாணடியன் மற்றும் மதுரை மாவட்ட செயலாளர் பாரூக்அலி இருவரும் கூட்டாக தெரிவித்தனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரையில் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாமில் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்பு..!

மதுரை எல்லீஸ் நகரில் வைகை டிரஸ்ட் சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாமை மேயர் இந்திராணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES