Thursday , September 19 2024
Breaking News
Home / Politics / “அண்ணாமலை அரசியல் கோமாளிதான்” அமைச்சர் செந்தில் பாலாஜி ரூட் சரி.. ஆதரவாக வந்த கேஎஸ் அழகிரி!

“அண்ணாமலை அரசியல் கோமாளிதான்” அமைச்சர் செந்தில் பாலாஜி ரூட் சரி.. ஆதரவாக வந்த கேஎஸ் அழகிரி!

தருமபுரி: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை அமைச்சர் செந்தில் பாலாஜி அரசியல் கோமாளி என்று விமர்சித்தது சரியே என்று காங்கிரஸ் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தமிழக ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்தின்படி நியமிக்கப்பட்டவர். ஆனால் ஆளுநர் ரவி ஒரு அரசியல் கட்சி பிரதிநிதி போல் பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளராக செயல்படுகிறார்.

கேஎஸ் அழகிரி கண்டனம் கோவை சம்பவம் குறித்து ஆளுநர் பேசியது தமிழக அரசு மீது குற்றம்சாட்டியதன் மூலம் நேரடியாக போர் தொடுத்துள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி மிக அபாயகரமான குற்றசாட்டு சொல்லியிருக்கிறார். இதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். ஆளுநரின் செயல்பாடுகள் எல்லாம் பார்த்தால் எடப்பாடிபழனிசாமி எப்படி மோடி முன் கைகட்டி வாய் பொத்தி நின்றாரோ அப்படியே தமிழக முதல்வர் ஸ்டாலின் நிற்க வேண்டும் என நினைக்கிறார்கள் என்று விமர்சித்தார்.

விளம்பர அரசியல் தொடர்ந்து அண்ணாமலை பற்றிய கேள்விக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அகில இந்திய தலைவர் போல் பேசி ஒரு விளம்பரத்தை தேடிக் கொள்கிறார். தொடர்ந்து அவர் அரசியல் கட்சி தலைவர்கள் மற்று அரசு அதிகாரிகள் மற்றும் பத்திரிக்கையாளர்களை அநாகரீகமாக பேசி வருகிறார். கோவை சம்பவத்தில் தமிழக காவல் துறை வெகு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதில் அரசியல் செய்யவே காவல் துறை மீது தொடர்ந்து அவதூறாக அண்ணாமலை பேசி வருகிறார் என்று தெரிவித்தார்.

செந்தில் பாலாஜி சொன்னது சரி பின்னர் காவல் துறை திமுகவின் மற்றொரு அலுவலகமாக செயல்படுகிறது என்ற அண்ணாமலையின் குற்றச்சாட்டு பற்றிய கேள்விக்கு, கோவை சம்பவத்தில் காவல் துறையின் நடவடிக்கை சிறப்பாக இருக்கிறது. காவல் துறை முந்தைய காலங்களை விட தற்போது சுதந்திரமாக செயல்படுகிறார்கள். சட்ட ஒழுங்கு பிரச்சினைகளை நன்றாக கையாளுகிறார்கள். அண்ணாமலை ஆதாரமில்லாமல், அரசியலுக்காக பேசுகிறார். தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி அண்ணாமலையை அரசியல் கோமாளி என்று சொன்னது சரியானது. எங்களை மாதிரி நல்ல முறையில் பேசினால் சரியாக இருக்காது என்று தெரிவித்தார்.

பாஜகவால் அதிமுகவுக்கு பின்னடைவு தொடர்ந்து, அதிமுகவிற்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு காரணம் பாஜகவுடன் கைகோர்த்தது தான். தற்போது தமிழகத்திற்கு கொடுத்து வரும் இதே அழுத்தத்தை அப்போது அதிமுக ஆட்சியில் மோடி, எடப்பாடி பழனிசாமிக்கு கொடுத்தார்கள். ஆனால் அந்த அழுத்தத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்குபிடித்து நிற்கிறார். எடப்பாடி பழனிசாமியால் தாக்குபிடித்து நிற்க முடியவில்லை. ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் போட்டி போட்டு டெல்லியில் சேவகம் செய்தார்கள். அதன் விளைவால் மட்டுமே அக்கட்சியினர் இயக்கத்தை இழந்துகொண்டிருப்பதற்கு காரணம் என்று தெரிவித்தார்.

Bala Trust

About Admin

Check Also

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது…

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES