திருப்பத்தூர்: தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது என தயாநிதி மாறன் எம்.பி.
தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் நடந்த கிரிக்கெட் நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்ற வீரர்களுக்கு திமுக எம்.பி.யும் மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளருமான தயாநிதிமாறன் பரிசுகளை வழங்கினார். பின்னர் பேசிய அவர்; தமிழகத்தில் பொய் சொல்லும் நபர்கள் அதிகமாக உள்ளனர். அது ஆடாக இருந்தாலும் ஆளுநராக இருந்தாலும் பொய் சொல்லி வருகின்றனர். பாஜகவினர் கூறுவதை யாரும் நம்ப வேண்டாம்.
அதனை கூகுளில் சர்ச் செய்து பாருங்கள் அவர்கள் சொல்லுவதை நம்பி ஏமாற வேண்டாம் பொய்களை சொல்லும் பாஜக. தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் தமிழக முதல்வர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இளைஞர்களின் நலனுக்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் விளையாட்டு மேம்பாட்டு அமைப்பு அனைத்து மாவட்டங்களிலும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த போட்டிகளையும் நடத்தி வைக்கப்பட்டு வருகிறது இவ்வாறு கூறினார்.
The post தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது: தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு