Thursday , September 12 2024
Breaking News
Home / Politics / மத்திய பிரதேசத்தில் குவிந்துள்ள தலைவர்கள்! சூடு பிடிக்கும் தேர்தல் களம்!!

மத்திய பிரதேசத்தில் குவிந்துள்ள தலைவர்கள்! சூடு பிடிக்கும் தேர்தல் களம்!!

மத்திய பிரதேசத்தில் குவிந்துள்ள தலைவர்கள்! சூடு பிடிக்கும் தேர்தல் களம்!!

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசத்தில் வருகிற நவம்பர் 17 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் அங்கு குவிந்துள்ளனர்.

230 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசத்தில் வருகிற நவம்பர் 17 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக தலைவர்களும் அதுபோல காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று மாநிலத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பேசி வருகின்றனர்.

மத்திய பிரதேசத்தின் பெதுல் பகுதியில் நடைபெற்ற பிரம்மாண்ட தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி பின்னர் ஷாஜாப்பூர் பகுதியில் நடைபெறும் கூட்டத்தில் பேசி வருகிறார்.

|டெல்டா மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

அதுபோல, சத்தர்பூர் பகுதியில் உ.பி. முதல்வர் யோகிஆதித்யநாத்தும் சிந்த்வாரா தொகுதியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மந்த்சூரில் முதல்வர் சிவராஜ் சிங் சௌகானும், ரத்லம் பகுதியில் அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் போபாலில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விதிஷா பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் திகம்கர் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செவ்தா(Sewda) பகுதியில் பொதுக்கூட்டத்தில் பேசி வருகிறார்.

மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் மொரேனா பகுதியில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

பாஜக, காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் குவிந்துள்ளதால் மத்திய பிரதேச தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோதலில் பாஜகவை வென்று காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. ஆனால், 2020-ஆம் ஆண்டு ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 22 போ பாஜகவுக்கு தாவியதால் காங்கிரஸ் ஆட்சியைப் பறிகொடுத்தது. தற்போது சிவராஜ் சிங் சௌகான் தலைமையிலான பாஜக ஆட்சியில் உள்ளது.

Bala Trust

About Admin

Check Also

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது…

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES